Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. மில்லியன் சேல்ஸ்.. ரூ.11,999 பட்ஜெட்ல 8GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டையே தூக்கி சாப்பிடும் விதமாக ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 12 சீரிஸ் (Redmi 12 Series) போன்கள், ஒரே மாதத்தில் 10 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வெறும் ரூ.11,000 பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்டிருக்கும் இந்த மாடல்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

ரெட்மி 12 5ஜி அம்சங்கள் (Redmi 12 5G Specifications): இந்த ரெட்மி 12 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.11,999 பட்ஜெட்ல 8GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

அதோடு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எம்ஐயூஐ 14 ஓஎஸ் (MIUI 14 OS) வருகிறது. இந்த ரெட்மி மாடலில் 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual Ram) வருகிறது. அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி 12 போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பெரிதும் பேசப்படும் அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும், சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார், பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.1, டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த போன் 199 கிராம் எடை கொண்டுள்ளது. மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Sliver), பாஸ்டெல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த கலர்களுடன் கிரிஸ்டல் கிளாஸ் பேக் பேனல் டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

இவ்வளவு மலிவான விலையில், கிரிஸ்டல் பேக் பேனல், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி கேமரா கொண்ட 5ஜி போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டிதால், விற்பனையில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இப்போது, இந்தியாவிலேயே ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான போன்களில் ரெட்மி 12 சீரிஸ் முதலிடம் பெற்றுள்ளது.

கடந்த 28 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் யூனிட் ரெட்மி 12 சீரீஸ் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ரெட்மி 12 4ஜி போனும் அடங்கும். சொல்லப்போனால், முதல் நாள் விற்பனையிலேயே, ரெட்மி 12 5ஜி போன் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட போன் என்ற பெருமையை பெற்றுவிட்டது.

இந்த தகவலை ரெட்மி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் ரெட்மி 12 4ஜி போன் மீடியாடெக் ஹீலியோ 688 சிப்செட், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரியுடன் வெளியானது. இதன் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 With 16GB RAM, 50MP Camera, 5000mAh Battery Sold 1 Million Units India Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X