Home
Mobile

மிரளுது விற்பனை.. வெறும் ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் திடீர் விலை குறைப்பு காரணமாக ரூ.10,000 பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், டிரிபிள் ரியர் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற கிடைக்காத அம்சங்களுடன் ரெட்மி 12 (Redmi 12) போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெட்மி 12 அம்சங்கள் (Redmi 12 Specifications): இந்த ரெட்மி போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்த கேமராவில் ஃபிலிமி ஃபில்டர் (Filmy Filters) மற்றும் வின்டேஜ் ஃப்ரேம் (Vintage Frame) போன்ற பிரத்யேக மோட்கள் வருகின்றன. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல டைப்-சி சார்ஜிங் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் வருகிறது. மாலி ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

இந்த ரெட்மி போனில் 6.69 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.10,499 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

மேலும், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. இந்த ரெட்மி மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதோடு 6 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த ரெட்மி போனில் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி 12 போனில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இதுவொரு 4ஜி மாடலாகும். இந்த மாடலில் மூன் ஸ்டோன் சில்வர் (Moonstone Silver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ரெட்மி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக நிர்ணயிக்கப்பட்டது.

அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 6 ஜிபி வேரியண்ட்டின் விலை இப்போது ரூ10,499ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையிலேயே அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரெட்மி தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மிகவும் கம்மியான விலையில் டிரிபிள் ரியர் கேமரா, 1 டிபி மெமரி சப்போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற நல்ல நல்ல அம்சங்கள் கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 With 12GB RAM, 5000mAh Battery Gets Price Drop in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X