Home
Mobile

ஃபயரு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.9,974 விலைக்கு 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையை (Flipkart Big Billion Days Sale) முன்னிட்டு 16ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ரெட்மி 12 போன் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது.

ரெட்மி 12 அம்சங்கள் (Redmi 12 Specifications): இந்த ரெட்மி போன் 6.69 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.9,974 விலைக்கு 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜிபியு (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ரெட்மி மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகின்றன. இதன் 6 ஜிபி மாடலில் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.

அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.

இந்த ரெட்மி போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2, ஜிபிஎஸ் (GPS) மற்றும் டூயல் 4ஜி (Dual 4G) ஆகியவை வருகின்றன. இந்த ரெட்மி நோட் 12 போன் மூன் ஸ்டோன் சில்வர் (Moonstone Silver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி மாடலுக்கு ரூ.900 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

அதேபோல 6 ஜி மாடலுக்கு ரூ.525 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஆகவே, 4 ஜிபி மாடலை ரூ.8,099க்கும் 6 ஜிபி மாடலை ரூ.9,974க்கும் வாங்கிக்கொள்ள முடியும். ரூ.9,000 பட்ஜெட்டில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, 1டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி கொண்ட போன் வேண்டுமானால், இது நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 Under Rs 9000 on Flipkart Big Billion Days Sale in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X