தக்காளி டிஸ்கவுண்ட்னா இப்படி இருக்கணும்.. பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் Redmi போன்.. எந்த மாடல்?
தள்ளுபடினா அது இப்படி இருக்கணும் என்பது போல பிளிப்கார்ட் வலைத்தளமானது பிரபலமான ரெட்மி மாடல் ஒன்றின் மீது "பாதிக்கு பாதி விலை" ஆபரை வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் ஆபர் விலையானது.. அசல் விலையின் பாதியை விட குறைவானதாக இருக்கிறது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? தற்போது பாதிக்கும் குறைவான விலையில் வாங்க கிடைப்பது - ரெட்மி 12 ஸ்மார்ட்போனாகும். பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் தற்போது இது 50% நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக 5% (ரூ.400 வரையிலான) பேங்க் ஆபரும் கிடைக்கிறது.

ரெட்மி 12 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh rate) உடனான 6.79 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் (MeditaTek Helio G88 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைட் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் 4ஜி ஆதரவுடன் வரும் ரெட்மி 12 மாடலை வாங்க விரும்பவில்லை, மாறாக 5ஜி சப்போர்ட் உடன் வரும் ரெட்மி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், நீங்கள் ரெட்மி 13 5ஜி மாடலை கருத்தில் கொள்ளலாம். தற்போது இது பிளிப்கார்ட்டில் 31% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,292 க்கு வாங்க கிடைக்கிறது
இது குவால்காம் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உடனான 6.79-இன்ச் புல்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 8ஜிபி வரையிலான ரேம், 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை, இது ஐசோசெல் எச்எம்6 சென்சார் மற்றும் எப்/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. மேலும் இது 3எக்ஸ் இன்-சென்சார் ஜூமிங்கையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5030எம்ஏஎச் பேட்டரி, மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவைகளை கொண்டுள்ளது.
ரூ.12,000 விட மலிவான பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால், மிகவும் சமீபத்தில் அறிமுகமான ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். தற்போது இது பிளிப்கார்ட்டில் 14% நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் விலையான ரூ.10,999 க்கு பதிலாக ரூ.9,385 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும்.
முன்னதாக இது ரூ.8,499 என்கிற அறிமுக சலுகையின் கீழ் வாங்க கிடைத்தது; தற்போது சற்றே அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி, ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் உடனான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








