Home
Mobile

லுக்குக்குகே குவியப்போகுது ஆர்டர்.. ஃபர்ஸ்ட் கிரிஸ்டல் கிளாஸ் போன்.. ரூ.15000 கூட கிடையாது.. எந்த மாடல்?

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் ரெட்மி 12 (Redmi 12) போன் முதன்முதலாக கிரிஸ்டல் கிளாஸ் டிசைனில் (Crystal Glass Design) உருவாக்கப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. பிரம்மாண்ட டிசைன் கொண்டிருந்தாலும், பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஒரு போனின் அம்சங்கள் மட்டும் சிறப்பாக இருந்தால் போதும் என்று நினைப்பது கிடையாது. அந்த போனின் டிசைனிலும் முழு கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். பார்ப்பதற்கே கண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனாலேயே அனைத்து ஸ்மாராட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதுப்புது டிசைன்களில் போன்களை களமிறக்கி வருகின்றன.

ஃபர்ஸ்ட் கிரிஸ்டல் கிளாஸ் போன்.. விலை வேற கம்மி.. எந்த மாடல்?

இருப்பினும், பிரத்யேக டிசைன் கொண்ட பெரும்பாலான போன்கள் மிட்-ரேன்ஞ் விலையில் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால், பல மாதங்கள் பணம் சேர்த்து வைத்து வாங்க வேண்டி இருக்கும். ஆனால், முதன் முதலாக கிரிஸ்டல் கிளாஸ் என்னும் பிரத்யேக பேக் டிசைன் கொண்ட ரெட்மி 12 போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த போனின் டிசைனை பார்த்தாலே வாங்கிவிட தோன்றும். அதன் மற்ற அம்சங்களும் பின்னியெடுக்கிறது.

ரெட்மி 12 அம்சங்கள் (Redmi 12 Specifications): இந்த ரெட்மி போன் 6.79 இன்ச் (1080X2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி 12 போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மிட்நைட் பிளாக் (Midnight Black), போலார் சில்வர் (Polar Silver) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) கலர்களுடன் கிரிஸ்டல் கிளாஸ் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் மற்ற எந்த போன்களிலும் இல்லாத வகையில் இருக்கிறது. இந்த போன் ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இதன் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், தாய்லாந்து நாட்டில் ரெட்மி 12 போனின் விலை 5,299 தாய் பாட் (இந்திய மதிப்பில் ரூ.12,600) ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, இந்த போனின் ஆரம்ப விலை ரூ.12000 ஆக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு அம்சங்களுடன் மலிவான பட்ஜெட்டில் வெளியாகிறது என்பதால், விற்பனை சக்கைப்போடு போடும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 Crystal Glass Design Smartphone Confirmed Amazon Availability Check Expected Price Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X