அள்ளிக்கோங்க.. அவ்ளோ கம்மி.. ரூ.10,999 விலையில் 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
"இவ்ளோ கம்மியா? அப்படினா ரெண்டு போன் வாங்கலாமே" என்று சொல்லும் அளவுக்கு கிரிஸ்டல் கிளாஸ் டிசைனோடும், பின்னியெடுக்கும் அம்சங்களோடும், ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போன் படுஜோராக விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்தியாவில் மலிவு விலை போன்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மிட்-ரேஞ்ச் போன்களில் கொடுக்கப்படும் அம்சங்களை மலிவு விலை போன்களில் கொடுத்து, இந்திய மார்கெட்டை பிடிக்க முயற்சித்து வருகின்றன. இதனால், மாதத்துக்கு நான்கு புது போன்கள் வெளியிடுகின்றன.

அந்த வரிசையில், ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 12 5ஜி போன் ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது. ஏனென்றால், அந்த போனின் தொடக்க விலை ரூ.11,999 மட்டுமே, ஆனால், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருந்தது. இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
ரெட்மி 12 5ஜி அம்சங்கள் (Redmi 12 5G Specifications): இந்த போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஜென் 2 சிப்செட் வருவது, இதுவே முதல்முறையாகும்.
அதோடு, ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 6.79 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி 12 போனின் கேமராவும் நன்றாகவே இருக்கிறது. டிரிபிள் ரியர் செட்டப் கொண்டுள்ளது. அதன்படி, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. மூன்ஸ்டோன் சில்வர் ( Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499 ஆகவும், மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 15,499ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 4) விற்பனைக்கு வந்துள்ளது.
அமேசானில் (Amazon) ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இப்போது, அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.10,999 க்கு வாங்கிக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








