50MP கேமரா, 5000mAh பேட்டரி..புதிய Redmi 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வருது.. கம்மி விலை.!
ரெட்மி நிறுவனம் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி.
குறிப்பாக ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் 23076RN4BI என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கீக்பெஞ்ச் தளத்தில் வெளியான இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் செல்ஃபி ஷூட்டருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் டிசைன் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ( Qualcomm Snapdragon 4 Gen2) சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவு கொண்டு இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் குறைந்த எடையில் வெளிவரும். அதேபோல் கம்மி விலையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








