மார்கெட்டே அதிருது.. ரூ.10,999 போதும்.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்தியாவில் முதல் முறையாக மலிவான விலையில் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், கிரிஸ்டல் கிளாஸ் பேக் பேனல் டிசைன் என்று ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) வெளியாகிறது.
இந்த போனின் மற்ற அம்சங்களை பார்த்தால், தூக்கி பாக்கெட்டில் போடும் அளவுக்கு அசத்துகிறது. இவ்வளவு கம்மியான விலைக்கு அறிமுகம் செய்யப்படுவதால் விற்பனையில் மிகப்பெரும் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்கள் என்ன? விற்பனை எப்போது? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ரெட்மி 12 5ஜி அம்சங்கள் (Redmi 12 5G Specifications): இந்த ரெட்மி போன் 6.79 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) கொண்ட குவால்கம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதே போல ரெட்மி 14 4ஜி மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட் வரலாம்.
அதோடு மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரெட்மி 12 போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual Ram) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. மிட்நைட் பிளாக் (Midnight Black), போலார் சில்வர் (Polar Silver) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கலர்களுடன் கிரிஸ்டல் கிளாஸ் பேக் பேனல் டிசைனில் போன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி 12 5ஜி போன் இன்று (ஆகஸ்ட் 1) நண்பகல் 12 மணிக்கு தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ரெட்மி 12 5ஜி போனின் தொடக்க விலையும் ரூ.11,999 ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல ரெட்மி 12 4ஜி போன் போனின் தொடக்க விலை ரூ.9,999 ஆக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அறிமுக சலுகையும் கிடைக்கும் என்பதால் ரூ.12,000 பட்ஜெட்டில் வாங்கிக்கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








