பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.10749 பட்ஜெட்ல 1TB மெமரி.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அசத்தலான டிஸ்கவுண்டில் வெறும் ரூ.10,749 பட்ஜெட்டுக்கு ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஃபுல்எச்டி டிஸ்பிளே, 1டிபி மெமரி சப்போர்ட், 50எம்பி கேமரா போன்ற பட்டாசான அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி 12 5ஜி அம்சங்கள் (Redmi 12 5G Specifications): இந்த ரெட்மி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm Mobile) சிப்செட் வருகிறது.

அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் இன்ச் 6.79 (2460 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
அதோடு 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கேமரா வருகிறது. அதே போல 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆகவே, ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared sensor) கொண்டிருக்கிறது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் (Side-mounted fingerprint sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பாட்டம் ஃபயரிங் டவுட் ஸ்பீக்கர்கள் (Bottom firing loudspeaker) வருகின்றன.
இந்த ரெட்மி மாடலில் 5ஜி, டூயல் 4ஜி, ப்ளூடூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரியோடு இந்த போன் 199 கிராம் எடைக் கொண்டுள்ளது.
இந்த ரெட்மி 12 5ஜி போன் மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Sliver), பேஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499ஆகவும் இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.1,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு (ICICI Bank Credit Card) பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications