ஆகஸ்ட் 1 க்கு அப்புறம்.. எல்லோர் கையிலும் இந்த 5G போன் தான் இருக்கும்.. கனவு விலையில் கலக்கல் ஸ்பெக்ஸ்!
2023 ஆகஸ்ட் மாத ஆரம்பமே அட்டகாசமாக இருக்கிறது. ஏனென்றால் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று கனவில் கூட எதிர்பார்க்காத விலையில் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவிலும், உலக அளவிலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிகழ்வின் போது 5ஜி மாடலுடன் சேர்த்து ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) மாடலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது; அதன் விலை இன்னும் மலிவாக இருக்கும்!

2 புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல, ஆகஸ்ட் 1 நிகழ்வில் ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் (Redmi Watch 3 Active) மற்றும் ஷாவ்மீ டிவி எக்ஸ் சீரீஸின் (Xiaomi TV X Series) கீழ் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் என பல வகையான புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்: ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (Storage Options) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். பேஸிக் வேரியண்ட் ஆன 6ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.13,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மறுகையில் உள்ள ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். பேஸிக் வேரியண்ட் (Basic Variant) ஆன 4ஜிபி ரேம் மாறுபாட்டின் விலை ரூ.9,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட் (Snapdrogan Chipset) உடன் வரும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இடம்பெறும் அதில் எல்இடி சென்சார் உடன் கூடிய 50எம்பி மெயின் கேமரா பேக் செய்யப்படும்.
மேலும் ரெட்மி 12 5ஜி ஆனது வசீகரிக்கும் ரெயின்போ சாயல்களுடன் கிரிஸ்டல் கிளாஸ் டிசைனுடன் ( crystal glass design) வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 90ஹெர்ட்ஸ் ஹை-ரெஃப்ரெஷ் ரேட் (90Hz High-Refresh Rate) மற்றும் 1080 x 2400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான சற்றே பெரிய 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14 ஸ்கின் (MIUI 14 Skin) மூலம் இயக்கப்படும் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி மாடலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அம்சங்களை (சிப்செட்டை தவிர்த்து) கடன் வாங்கலாம்.
ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் ஸ்மார்ட் வாட்சை பொறுத்தவரை, இது இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் வெளியாகும். இந்தியாவில் இது ரூ.5,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக உள்ள ஷாவ்மீ டிவி எக்ஸ் சீரீஸை பொறுத்தவரை, இதன் கீழ் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் மூன்று 4கே டிவிகள் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








