Home
Mobile

பட்டித்தொட்டி எங்கும் பறந்த ஆர்டர்.. இவ்ளோ கம்மி விலைக்கு இப்படி ஒரு 5G போன்-ஆ.. என்ன விலை? என்ன மாடல்?

இந்தியாவில் 5ஜி போன்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் ஒரு 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

அந்த கம்மி விலை ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இந்தியா முழுவதும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி 12 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 12 5ஜி போனின் விலை 11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மறறும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.13,499-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.15,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

Redmi 12 5G: பட்டித்தொட்டி எங்கும் பறந்த ஆர்டர்!

அமேசான் அறிவித்த தகவலின்படி, முதல் நாளில் அதிக விற்பனையான 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போன். இந்த போனின் ஆர்டர்கள் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பெறப்பட்டன. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது ரெட்மி 12 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 12 5ஜி போன் ஆனது 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Qualcomm Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது ரெட்மி 12 5ஜி போன். குறிப்பாக இதுபோன்ற சிப்செட் கம்மி விலையில் வெளிவருவது இதுவே முதல்முறை. மேலும் இந்த சக்திவாய்ந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் இதில் ரெட்மியின் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) மற்றும் மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இந்த ரெட்மி போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதி இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

Redmi 12 5G: பட்டித்தொட்டி எங்கும் பறந்த ஆர்டர்!

மேலும் IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ப்ராரெட் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், பாட்டம் ஃபாயரிங் லவுட்ஸ்பீக்கர், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மூன்ஸ்டோன் சில்வர் ( Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய 3 கலர்களில் ரெட்மி 12 5ஜி போன் கிடைக்கும்.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 12 5ஜி போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த புதிய ரெட்மி 12 5ஜி போனின் முதல் நாளிலேயே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 5G has become the best selling 5G phone on the first day of sale on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X