Home
Mobile

ரூ.9,999 விலையில் 5G Mobile.. Redmi வழங்கும் கூப்பன் சலுகை.. எப்படி ஆர்டர் செய்தால் முழு சலுகை கிடைக்கும்?

ஜூன் மாதத்தில் புது போன் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஒரு லக்கி சான்ஸ் கிடைத்துள்ளது. வெறும் ரூ.9,999 செலவில் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் (Redmi 5G Smartphone) வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆர்டர் செய்யும் முன் இந்தவொரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும்.

சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி துணை நிறுவனத்தின் அட்டகாசமான பட்ஜெட் செக்மென்ட் (budget segment) ஸ்மார்ட்போன் சாதனமான ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) சாதனத்தை வழக்கத்தை விட மிகவும் குறைந்த விலையில் வாங்க இப்போது ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் இந்த பதிவில் கூறப்போகும் ஒரு சிறிய டிப்ஸை வைத்து, வெறும் ரூ.9,999 என்ற விலையில் புது 5ஜி போனை உங்களால் வாங்க முடியும்.

ரூ.9,999 விலையில் 5G Mobile.. Redmi வழங்கும் கூப்பன் சலுகை..

ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G):

Redmi 12 5G ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விற்பனை சாதனைகளை இந்த சாதனம் எட்டியுள்ளது. இது பட்ஜெட் விலையில் ஈர்க்கக்கூடிய அம்சங்களை கொண்ட சிறந்த 5ஜி மொபைல் (best 5G mobile) ஆக கருதப்படுகிறது. Redmi 12 5G ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

இந்த அடிப்படை வேரியண்ட் மாடலின் விலை ரூ.11,999 ஆக அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்போது, சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இந்த போனுக்கு ​​கூப்பன் சலுகையும் கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ.2000 என்பது கவனிக்கத்தக்கது. இந்த ரெட்மி 12 5ஜி போனை ஆர்டர் செய்வதற்கு முன்பாக Apply Cupon என்பதை கிளிக் செய்ய மறக்காதீர்கள். இப்படி கிளிக் செய்யும் பொழுது இந்த போனின் விலை ரூ.9,999 ஆக குறையும்.

இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் என்று மூன்று விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. இதில் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு மட்டுமே ரூ.2000 மதிப்பிலான கூப்பன் சலுகை கிடைக்கிறது.

எப்படி கூப்பன் சலுகையை பெறுவது? எந்த ரெட்மி 12 5ஜி மாடலுக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்?

மற்ற இரண்டு வேரியண்ட் மாடல்களுக்கும் ரூ.1000 மதிப்பிலான கூப்பன் சலுகை கிடைக்கிறது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ.15,999 ஆகும். அமேசான் சலுகை விலையாக இது இப்போது ரூ.11, 999 என்ற விலையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. கூப்பன் சலுகை கிளிக் செய்வதுடன் ரூ.9,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது.

ரூ.10,000 விலைக்குள் ஒரு பெஸ்டான 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வாங்க ஆசைப்பட்டிருந்தால், இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் உண்மையிலேயே மிக சிறந்த தேர்வாக அமைகிறது. ஒரு வேலை உங்களுக்கு 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் போதாது என்றால், இதன் உயர்தர வெறியன்ட் மாடலை பெற்று மகிழ்ந்திடலாம்.

Best Mobiles in India

English summary
Redmi 12 5G Budget Smartphone 4GB RAM 128GB Storage Variant Gets Coupon Offer From Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X