Home
Mobile

வாங்கிடாதீங்க.. Amazon, Flipkart-ல் ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்த 2 Redmi போன்களையும் வாங்கிடாதீங்க.. ஏன்னா?

ஜனவரி 19 ஆம் தேதி வரையிலாக பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்திலும் மற்றும் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலாக அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்திலும் 2024 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விற்பனைகள் (2024 Republic Day Sale) நடைபெற உள்ளது.

வழக்கம் போல இம்முறையும், பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் மீது நம்பமுடியாத விலைக்குறைப்புகள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில ஸ்மார்ட்போன்கள் அந்தந்த விலைப்பிரிவுகளில் வாங்குவதற்கான சிறந்த ஸ்மார்ட்போன்களாக இல்லை!

ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்த 2 Redmi போன்களையும் வாங்கிடாதீங்க!

குறிப்பாக ரெட்மி 12 4ஜி (Redmi 12 4G) மற்றும் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) மாடல்கள். பிளிப்கார்ட்டில் ரெட்மி 12 4ஜி ​​ஸ்மார்ட்போன் (தள்ளுபடிக்கு பிறகு) தற்போது ரூ.9,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுகையில் உள்ள ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் (தள்ளுபடிக்கு பிறகு) அமேசான் இந்தியா வழியாக ரூ.10,999 க்கு விற்கப்படுகிறது.

இவ்விரு 2 ரெட்மி ஸ்மார்ட்போன்களுமே அட்டகாசமான தள்ளுபடிகளை பெற்றுள்ள போதிலும் கூட, ரெட்மி 12 மற்றும் ரெட்மி 12 5ஜி ஆகிய இரண்டுமே அந்தந்த பட்ஜெட்டில் வாங்குவதற்கான சிறந்த போன்களாக தற்போது இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்டிற்கு இடையே ரூ.1500 வித்தியாசம் மட்டுமே உள்ளது.

ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்த 2 Redmi போன்களையும் வாங்கிடாதீங்க!

இவ்விரு போன்களில் எதை வாங்கலாம் என்று கேட்டால். 4ஜி மாடலை வாங்குவதற்கு பதில் 5ஜி மாடலை வாங்குவது தான் புத்திசாலித்தனம். ரெட்மி 12 5ஜி மாடலை பொறுத்தவரை, ரூ.12,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் 5ஜி போன்களில் ஒன்றாக (One of the 5G Phone) உள்ளது. ஆனால் பெஸ்ட் 5ஜி போனாக (Best 5G Phone) இல்லை!

உங்களிடம் கடுமையான பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தால்.. அதே சமயம் நீங்கள் மென்மையான ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நல்ல கேமராக்களுடன் 5Gஜி கனெக்டிவிட்டியை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை தேடினால்.. கண்களை மூடிக்கொண்டு ரெட்மி 12 5ஜி மாடலை வாங்குவதற்கு பதிலாக கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) மாடலை வாங்கலாம்.

ஆஃபர் விலையில் கிடைக்கும் இந்த 2 Redmi போன்களையும் வாங்கிடாதீங்க!

ஏனென்றால்.. ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ரெட்மி 13சி 5ஜி மாடலானது ஒரு "திடமான ஸ்மார்ட்போனாகவும்" (Solid Smartphone) உள்ளது. இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, பெரிய பேட்டரி, ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ஸ் (Splash Resistance), பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், 50 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் வருகிறது.

ஒட்டுமொத்தமாக ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் (Best 5G Phone Under Rs.12000) ஒன்றாக ரெட்மி 13சி 5ஜி உள்ளது. ஆக ரெட்மி 12 4ஜி-க்கு பதிலாக ரெட்மி 12 5ஜி மாடலை வாங்குவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கலாம். இருப்பினும் ரெட்மி 13சி மாடலை வாங்குவது இன்னும் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒருவேளை உங்களுக்கு ரெட்மி பிராண்டிங் (Redmi Branding) மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லையென்றால், மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G) ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது ஜனவரி 17 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இது டீசன்ட் ஆன பெர்ஃபார்மென்ஸ், வேகன் லெதர் பேக் பேனல் (Leather Back Panel), ஸ்டாக் ஆண்ட்ராய்டு (Stock Android), 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 4G VS Redmi 12 5G Vs Redmi 13C 5G Which one to Buy in Amazon Flipkart Republic Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X