Home
Mobile

விடவே கூடாத மாடல்.. ரூ.9,999 போதும், 50MP கேமரா.. 5,000mAh பேட்டரி.. கிரிஸ்டல் டிசைன்.. எந்த போன்?

இந்தியாவில் மலிவு விலையில் வெளியாகும் போன்களுக்கு மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 12 (Redmi 12) போனின் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இந்த விலைக்கு 50எம்பி கேமரா, ஹீலியோ ஜி88 சிப்செட், 5,000mAh பேட்டரி வருவது இதுவே முதல்முறையாகும்.

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 12 4ஜி போன் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த போன் மலிவான பட்ஜெட்டில் வெளியாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், மற்ற நாடுகளில் இந்த போன் ரூ.12,000 பட்ஜெட்டில் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது.

ரூ.9,999 போதும், 50MP கேமரா.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆகவே, அந்த விலையிலேயே இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்ப்பட்டது. ஆனால், இப்போது கசிந்துள்ள விலை விவரங்கள் அந்த போன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வளவு மலிவான விலையில் அட்டகாசமான அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரத்யேக கிரிஸ்டல் கிளாஸ் பேக் பேனல் டிசைனையும் இந்த போன் கொண்டுள்ளது. இந்த போனின் விலை, அம்சங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.

ரெட்மி 12 அம்சங்கள் (Redmi 12 Specifications): இந்த ரெட்மி போன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.79 இன்ச் (1080X2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயூஐ 14 யூஐ ஓஎஸ் (MIUI 14 UI OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு மாலி - ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரெட்மி 12 போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்று டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் IP53 தர ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

போலார் சில்வர் (Polar Silver), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் ஸ்கை ப்ளூ (Sky Blue) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் பேக் பேனல் கிரிஸ்டல் கிளாஸ் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி 12 4ஜி போன் ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகமல் இருந்துவந்த நிலையில், இப்போது, கசிந்துவிட்டது. இந்த கசிந்த தகவலின் அடிப்படையில், ரெட்மி 12 4ஜி போன் போனின் தொடக்க விலை ரூ.9,999ஆக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல ரெட்மி 12 5ஜி போனின் தொடக்க விலையும் ரூ.13,999ஆக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்த போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 12 4G Phone Under 10000 Price Tipped Before August 1 Launch in India, Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X