அவசரப்பட்டு வாங்கிடாதீங்க.. மீண்டும் விற்பனைக்கு வந்த Redmi 12.. ஆனா இந்தமுறை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை, இன்றுவரை பிச்சிக்கிட்டு பறக்கிறது என்றே கூறலாம். ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முதல் நாள் விற்பனையிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன் என்கிற சாதனையை படைத்தது.
அதுமட்டுமல்ல ரெட்மி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது அறிமுகமான 28 நாட்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து இன்னொரு சாதனையையும் படைத்தது. இந்திய மக்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் அதிக தேவை காரணமாக, ரெட்மி 12 4ஜி மாடலின் கையிருப்பு விரைவாக தீர்ந்தன.

அது எப்போது ரீஸ்டாக் செய்யப்படும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், ரெட்மி 12 4ஜி மாடலானது பிளிப்கார்ட் வழியாக மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அடித்து பிடித்து வாங்கும் அளவிற்கு ரெட்மி 12 4ஜி அப்படி என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதன் விலை என்ன? இதோ விவரங்கள்:
ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடனான 6.79-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 ப்ராசஸர் (MediaTek Helio G88 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
6ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 6ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் வரும் ரெட்மி 12 4ஜி மாடலானது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் + 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளன.
முன்பக்கத்தை பொறுத்தவரை, 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபைi, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளன.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மி 12 4ஜி ஆனது ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி53 மதிப்பீட்டை கொண்டுள்ளது; மேலும் பாதுகாப்பான அன்லாக்கிங்கிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட எம்ஐயுஐ 14 மூலம் இயங்குகிறது.
ரெட்மி 12 4ஜி மாடலின் விலை நிர்ணயம்: இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பேஸ்டல் ப்ளூ (Pastel Blue), மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Silver) மற்றும் ஜேட் பிளாக் (Jade Black) என்கிற 3 கலர்களின் கீழ் வாங்க கிடைக்கின்றன.
ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவங்களின் 5ஜி சேவைகள் "கிட்டத்தட்ட" நாடு முழுவதும் அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், நீங்கள் ரெட்மி 12 4ஜிக்கு பதிலாக ரெட்மி 12 5ஜி மாடலை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானதாக இருக்கும்.
ஏனென்றால் ரெட்மி 12 4ஜி-க்கு பதிலாக ரெட்மி 12 5ஜி மாடலை வாங்க நீங்கள் கூடுதலாக ரூ.2000 செலவு செய்தால் போதும். 5ஜி மாடலானது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.11,999; 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,499 மற்றும் கடைசியாக உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.15,499 ஆகும்.


Click it and Unblock the Notifications