Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனம் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன்

ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு
1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும்.

மீடியாடெக்

இந்த புதிய ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும் என்றே கூறலாம். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுஇந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ரெட்மி 11 5ஜி

ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பலவேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத்

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi 11 5G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X