Home
Mobile

ஏப்ரல் 20: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனம் வரும் ஏப்ரல் 20-ம் தேதி புதிய ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10ஏ

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 720×1,600 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்தவடிவமைப்புடன் வெளிவரும்.

திய ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில்

இந்த புதிய ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியுடன் PowerVR8320 GPU ஆதரவும் உள்ளது.எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில்

குறிப்பாக ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு
ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் மாடல்.

ந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில்

இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் 3.5மிமீ ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 10ஏ ரூ.9,999-விலையிலும், இதன் 4ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.8,999-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi 10A with 13 Mega Pixel Camera Launching in India on April 20: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X