Home
Mobile

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ரெட்மி நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த ரெட்மி 10 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 மற்றும் 64ஜிபி மெமரி கொண்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரிகொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. குறிப்பாக மார்ச் 24-ம் தேதி பிளிப்கார்ட், மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடிகிடைக்கும்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 20:6:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

திர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம்

ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாகஇருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் பின்புறம்

புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

6000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு சென்சார் வசதிளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

4ஜி எல்டிஇ,வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0

4ஜி எல்டிஇ,வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் எடை 203 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Redmi 10 With Dual Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X