Home
Mobile

ரூ.10,000-விலையில் ரெட்மி 10 பிரைம்? எப்போது அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

ரெட்மி நிறுவனத்தின் புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது வரும் செப்டம்பர் 3-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்

இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம் ரூ.10,000 முதல் ரூ.12,000 க்குள் அறிமுகம் செய்யப்பட வாயப்பு உள்ளது.
இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

 எஃப்எச்டி

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் Dot டிஸ்பிளே வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

த சாதனத்தின் பின்புறம் 50எம்பி

அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் ரெட்மி 10 பிரைம்.

 MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபி

4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Redmi 10 Prime with 50 Mega Pixel Camera Launching in India on September 3: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X