Home
Mobile

ரூ.11,000 விலையில் அறிமுகமாகுமா ரெட்மி 10 பிரைம்.! இதோ முழு விவரம்.!

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போன் தான் இந்திய சந்தையில் ரெட்மி 10 பிரைம் பெயரில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ரெட்மி 10 பிரைம் சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ரெட்மி 10 பிரைம்

மேலும் ரெட்மி 10 பிரைம் 2106119BI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்.ஐ.யு.ஐ. 12.5 மற்றும் ப்ளூடூத் 5.2 வசதி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி
சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெரிய டிஸ்பிளே என்பதால் கேமிங், வீடியோபோன்ற வசதிகளுக்கு அருமையாக பயன்படுத்த முடியும்.

 மீடியாடெக் ஹீ

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சாதனத்தில் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது

இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவலின்படி, ரெட்மி 10

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் ரெட்மி 10 பிரைம்.

ட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்

குறிப்பாக இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவராது. அதாவது 4ஜி ஆதரவுடன் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்
ரூ.11,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi 10 Prime May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X