ஐயா ஆல் ரவுண்ட் சூப்பர் ஸ்டார்: வேற லெவல் அம்சத்தோடு குறைந்த விலையில் ரெட்மி 10 ப்ரைம்!
ரெட்மி 10 ப்ரைம் இந்திய வெளியீட்டு தேதி செப்டம்பர் 3 ஆம் தேதி என டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ரெட்மி 10 ப்ரைம் சாதனம் கடந்த வாரம் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10 மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.

ரெட்மி 10 ப்ரைம் வெளியீடு
இந்தியாவில் ரெட்மி 10 ப்ரைம் வெளியீடு செப்டம்பர் 3 ஆம் தேதி என சியோமி டீஸ் செய்துள்ளது. சீன நிறுவனம் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை பிரத்யேக மைக்ரோசைட் மூலம் வெளிப்படுத்தியது. ஸ்மார்ட்போனானது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே, புதிய மீடியாடெக் ஹீலியோ எஸ்ஓசி உடன் இயக்கப்படும் என்பது டீஸ் செய்யப்பட்டுள்ளது.

டுவிட்டரில் பதிவிட்ட பதிவு
சியோமி டுவிட்டரில் தனது ரெட்மி இந்தியா கணக்கின் பயனர் பெயரை 10 தனித்துவமான பிரைம் எண்களாக மாற்றியது. டுவிட்டரில் பதிவிட்ட பதிவு குறித்து பார்க்கையில், இது டைமரைக் கொண்டுள்ளது. இந்த டுவீட் செப்டம்பர் 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மைக்ரோசைட் ரெட்மி 10 ப்ரைமின் சில முக்கிய அம்சங்களையும் டீஸ் செய்துள்ளது. இது ஹோல் பஞ்ச் வடிவமைப்பு, இரட்டை மைக்ரோஃபோன்கள் உடன் வருகிறது.

ரெட்மி 10 ப்ரைம் விலை
இந்தியாவில் ரெட்மி 10 ப்ரைம் விலை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.13,300 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ரெட்மி 10 சாதனத்தின் உலகளாவிய விலை ஏற்ப இது இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இந்திய மதிப்புப்படி ரூ.14,800 ஆக இருக்கும் எனவும் அதேபோல் இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.16,600 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனம் வடிவமைப்பில் நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியோடு வருகிறது.

50 எம்பி பிரதான கேமரா
ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா என நான்கு கேமராக்கள் இருக்கின்றன. இதன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

ரெட்மி 10 பிரைம் விவரக்குறிப்புகள்
ரெட்மி 10 பிரைம் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுகிறது)
மறுபெயரிடப்பட்ட ரெட்மி 10 என்ற ஊகத்தை நாங்கள் கருத்தில் கொண்டால், ரெட்மி 10 பிரைம் கடந்த வாரம் சியோமி அறிவித்த விவரக்குறிப்புகளின் அதே பட்டியலுடன் வரலாம். இது 6.5 இன்ச் முழு எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) அடாப்டிவ் சிங்க் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 சிஓசி மற்றும் 6 ஜிபி ரேம் வரை இருக்கலாம். ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டருடன் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பும் இருக்கலாம். இது முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாரையும் சேர்க்கலாம்.


Click it and Unblock the Notifications