Home
Mobile

இந்தியாவில் ரூ.12,499-விலையில் அட்டகாசமான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (செப்டம்பர் 3) அறிமுகம் செய்துள்ளது. 6000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு தனித்துமவான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் விலைரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன்6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,499-விலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்தசாதனத்தை அமேசான், Mi.com, Mi Home stores தளங்களில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வாங்க முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தளங்களில் HDFC வங்கி

மேலே கூறப்பட்டுள்ள அந்த தளங்களில் HDFC வங்கி கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரெட்மி 10 பிரைம் சாதனத்தை வாங்கினால் ரூ.750 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10 பிரைம்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி
மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் துல்லியமாக புகைப்படங்கள்
மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா
ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
ரெட்மி நிறுவனம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்

இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

க்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக Astral White, Bifrost White மற்றும் Phantom Black நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

 9W reverse சார்ஜிங் ஆதரவுடன்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும்9W reverse சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார்ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

 அனைத்து அமசங்களு

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அமசங்களும் மிக சிறப்பாக உள்ளது. ஆனால் இது 5ஜி ஸ்மார்ட்போன் கிடையாது. அதாவது 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.

 ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் உள்ளன

குறிப்பாக பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களும் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் இந்திய சந்தையில் இந்த சாதனம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்
பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது, ஆனால் நேற்று குறிப்பிட்ட சில ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது themobileindian வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, ரெட்மி 9, ரெட்மி 9ஐ, ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9 பவர், ரெட்மி நோட் 10டி மற்றும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் புதிய விலை சியோமி இந்தியாவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi 10 Prime in India Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X