நீங்கள் எதிர்பார்த்த சிப்செட் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Redmi 10 Prime+ 5G.!
ரெட்மி நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி (Redmi 10 Prime+ 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி
மேலும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உடன் மாலி ஜி57 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது.

தரமான சிப்செட்
இந்த சிப்செட் கேமிங், எடிட்டிங் போன்ற அனைத்திற்கும் மிக அருமையாக பயன்படும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ஸ்மார்ட்போனை எவ்விதத் தடையில்லாமலும்,
பாதுகாப்பாகவும் பயன்படுத்த உதவுகிறது இந்த அருமையான சிப்செட் வசதி.

ஆண்ட்ராய்டு 12 இயங்குளம்
குறிப்பாக ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது 4ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.
இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

டூயல் ரியர் கேமரா
அதேபோல் ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.
மேலும் இந்த ரெட்மி 10 பிரைம் பிளஸ் 5ஜி ஆனது யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த மாதம் இந்நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது அந்த ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11 எஸ்இ
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட்
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ஆதரவும் உள்ளது. பின்பு இந்த மொபைல்ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது.

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும்.

என்ன விலை?
5ஜி, டூயல் சிம் ஆதரவு, புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இந்த ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. பின்பு இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.12,800-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications