Home
Mobile

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999-விலையில் கிடைக்கும். குறிப்பாக வெள்ளை, நீலம், கருப்பு நிறங்களில் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமேசான், சியோமி தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல
சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி 10 பிரைம் 2022

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் மாலி ஜி52 ஜிபியு ஆதரவு மற்றும் HyperEngine 2.0 வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

பிரைம் 2022 ஸ்மார்ட்போனின்

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனில்

இந்த ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 9 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங், கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

யல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,3.5மி

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,3.5மிமீ ஜாக், ஐஆர் பிளாஸ்டர், ஹைப்ரிட் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஸ்பிளாஸ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்-ஐபி53 போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1,

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் எடை 192 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi 10 Prime 2022 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X