Home
Mobile

50எம்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதிய ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம். இப்போது ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பவர்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பவர் பிளாக் மற்றும் ஸ்போர்ட்டி ஆரஞ்சுநிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் Mi.com, Mi Home, Amazon தளங்களில் விரைவில் விற்பனைக்கு வரும்.

6.7-இன்ச் எச்டி பிளஸ்

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 10 பவர்

குறிப்பாக ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம்

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோக்கால்
அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் மாடல்.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன்.

வைஃபை, புளூடூத் வி5. ஜிபிஎஸ்/ஏ-

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5. ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி 10 பவர். மேலும் இந்த ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனின் எடை 203 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi 10 Power With 6,000mAh Battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X