50எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் மாடல் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரெட்மி 10 2022 சாதனத்தின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

இப்போது ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த புதிய ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 405 PPI பிக்சல் அடர்த்தி,கொரில்லா கிளாஸ் 3 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஜி88 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். பின்பு MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 9 வாட்ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை ஸ்கேனர்வதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் என்எஃப்சி, ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் டூயல் ஸ்பீக்கர்கள் வசதியும் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. கார்பன் கிரே, பெப்பிள் ஒயிட் மற்றும் சீ ப்ளூ போன்ற மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications