Home
Mobile

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் மாடல்.!

ரெட்மி நிறுவனம் விரைவில் புதிய ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் என பல அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 2022

ரெட்மி 10 2022

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080×2400
பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி 10 2022 ஸ்

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஜி70 சிப்செட் வசதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் ஆனது

இந்த ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும்
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனில் 50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5000 எம்ஏஎச்
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன் மாடல் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த
ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச்

ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக பட்ஜெட் விலையில் வாங்க சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் இதுதான்.

 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பு

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும்
புகைப்படங்களை எடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Redmi 10 2022 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X