2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!

|

Redmi 10 2022 ஸ்மார்ட்போனானது அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது, பட்ஜெட் விலைப் பிரிவில் இருக்கும் பல ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 10 தொடரில் மற்றொரு ஸ்மார்ட்போன்

ரெட்மி 10 தொடரில் மற்றொரு ஸ்மார்ட்போன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சியோமியின் துணை பிராண்டான ரெட்மி, இந்தியாவில் சில ஸ்மார்ட்போன்களை மட்டுமே வெளியிட்டது. அதில் இரண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றது.அவை ரெட்மி 10 மற்றும் ரெட்மி 10ஏ ஆகும்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ரெட்மி 10 தொடர் இதோடு முடிவடையவில்லை. காரணம் ரெட்மி தளத்தில் மற்றொரு ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

ரெட்மி 10 2022 குறித்து வெளியான தகவல்

ரெட்மி 10 2022 குறித்து வெளியான தகவல்

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இதுகுறித்து பகிர்ந்த தகவலை பார்க்கலாம். ரெட்மி 10 2022 என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

ரெட்மி இணையதளத்தில் ரெட்மி 10 2022 பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை முகுல் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தற்போது வரை இந்த ஸ்மார்ட்போனின் பெயரை தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை, முந்தைய ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட பதிப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்குமா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போன்

மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போன்

ரெட்மி தரப்பில் மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. அது ரெட்மி 10சி ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன்தான் ரெட்மி 10 2022 என மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வெளியாக இருக்கிறது என தகவல் தெரிவிக்கிறது.

இந்த தகவல் உறுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவாக இருக்கும் என கணிக்க முடிகிறது. அதேபோல் இந்த தகவலின் மூலம் ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் விலையையும் கணிக்க முடிகிறது.

ரூ.10,000 - ரூ.13,000 விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்

ரூ.10,000 - ரூ.13,000 விலைப்பிரிவில் புது ஸ்மார்ட்போன்

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனானது ரூ.10,000 - ரூ.13,000 விலைப்பிரிவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் முழு HD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ரூ.10,000 விலைப் பிரிவில் முன்னதாக சில ஸ்மார்ட்போன்களை ரெட்மி அறிமுகம் செய்திருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது, அதே விலைப்பிரிவில் அறிமுகமாகும் ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனிலும் முந்தைய மாடல்களில் பொருத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெறும் ஊகம் மட்டுமே, ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு பிறகே இதன் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பு

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பு

மேலும் ரெட்மி 10 2022 இல் என்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை முன்னதாக அறிமுகமான ரெட்மி 10 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 720 x 1650 பிக்சல் தீர்மானத்துடன் எச்டி ஆதரவு டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் காட்சியுடன் கூடிய 6.71 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

தரமான சிப்செட் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்

தரமான சிப்செட் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்

ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் மிகப் பெரிய 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. MIUI 13 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

50 எம்பி பிரதான கேமரா ஆதரவு

50 எம்பி பிரதான கேமரா ஆதரவு

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இருக்கும் என கூறப்படுகிறது.

அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 5 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

அதோடு டூயல் சிம் கார்ட் ஸ்லாட்கள், 4ஜி, ப்ளூடூத் 5.0ஏ, யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பல இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

சமீபத்தில் அறிமுகமான ரெட்மி 10ஏ ஸ்போர்ட்

சமீபத்தில் அறிமுகமான ரெட்மி 10ஏ ஸ்போர்ட்

இதே ரெட்மி 10 பிரிவில் ரெட்மி 10ஏ ஸ்போர்ட் என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பெரிய டிஸ்ப்ளே ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் வாட்டர்-டிராப் நாட்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் 1600 x 720 பிக்சல்ஸ், 20:9 ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருக்கிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் பொருத்தப்பட்டிருக்கிறது. அது மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் ஆகும்.

அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது.

ரூ.10,000 விலைப்பிரிவில் பக்கா ஸ்மார்ட்போன்

ரூ.10,000 விலைப்பிரிவில் பக்கா ஸ்மார்ட்போன்

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா (f2.2 aperture) ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் மென்மையான புகைப்படங்களை பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இதன் 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi 10 2022 listed on Xiaomi india website: might be launching soon in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X