Home
Mobile

ரெட்மி 10 2022 மார்ச் மாதம் அறிமுகமா?- ஆண்ட்ராய்ட் 11, 5000 எம்ஏஎச் பேட்டரி: விலை என்ன தெரியுமா?

ரெட்மி 10 அடுத்த ஆண்டின் ஏதாவது ஒரு பகுதியில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ரெட்மி 10 2022 அடுத்த ஆண்டு மார்ச் மாத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi 10 2022 ஸ்மார்ட்போன்

Redmi 10 2022 ஸ்மார்ட்போன்

Redmi 10 2022 ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் மூன்று பின்புற கேமராக்களை கொண்டிருக்கலாம் எனவும் இது எம்ஐயூஐ 12.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனில் நிறுவனம் தீவிரமாக பணி புரிந்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில கசுவுத் தகவல்கள் வெளியானது அதேபோல் கூகுள் ப்ளே பட்டியலில் இந்த சாதனம் காணப்பட்டது.

பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

வெளியான தகவலின்படி. ரெட்மி 10 2022 சாதனம் மையமாக சீரமைக்கப்பட்ட பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்களின் முழு HD+ தெளிவுத்திறன் உடன் வரும் என கூறப்படுகிறது. இதில் டிஸ்ப்ளே அளவு பட்டியலில் வெளிப்படுத்தப்படவில்லை.

4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்

ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு உடன் கூடிய மீடியாடெக் எம்டி6769 சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் உடன் வரும் எனவும் ஹீலியோ ஜி88 இடம்பெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்குகிறது என்பதை பட்டியல் காட்டுகிறது. ஸ்மார்ட்போன் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என பட்டியல் தகவல் தெரிவிக்கிறது.

மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம்

மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம்

ரெட்மி 10 2022 சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இது இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி ஆகியவைகளோடு வருகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.11,650 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.12850 ஆக இருக்கிறது. இந்த நிலையில் ரெட்மி 10 2022 சாதனத்தின் விலை இதே பிரிவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள்

ரெட்மி 10 2022 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இதுவும் இரண்டு வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் இது வரலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐயூஐ 12.5 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் 5ஜி இணைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்புற கேமரா அமைப்பு

பின்புற கேமரா அமைப்பு

ரெட்மி சாதனத்தின் பின்புற கேமரா அமைப்பில் சாம்சங் எஸ்5கேஜேஎன்1 அல்லது ஓம்னிவிஷன் OV50C40 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கும் எனவும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் ஓம்னிவிஷன் மூன்றாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வைட், ஆஷ் மற்றும் ப்ளூ வண்ண விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலோ அல்லது மார்ச் மாதத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi 10 2022 Could Launch in Next Year March: Expected Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X