மிரண்டு போவீங்க.. மொரட்டு கேமிங்.. 12GB ரேம்.. 6500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. SAMSUNG கேமரா.. எந்த மாடல்?
கேமிங்னு வந்தா ஐயா கில்லிடா என்று சொல்லும் அளவுக்கு ஆர்ஜிபி எல்இடி, ஐ புரொடெக்சன் டிஸ்பிளே, ஏஐ பவர்ட் கேமிங் என்ஹான்ஸ்மென்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் கேமரா, அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 6500mAh பேட்டரி போன்ற பக்கா பேக்குடன் ரெட்மேஜிக் 9எஸ் ப்ரோ (REDMAGIC 9S Pro) மாடலானது, மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பிரீமியம் கேமிங் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.
ரெட்மேஜிக் 9எஸ் ப்ரோ அம்சங்கள் (REDMAGIC 9S Pro Specifications): இந்த போனில் 6.8 இன்ச் (2480 x 1116 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மேலும், டிசி டிம்மிங் மற்றும் 21600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. ரெட் மேஜிக் ஓஎஸ் 9.5 (Redmagic OS 9.5) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. லீடிங் வெர்ஷனான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது.
இதுவொரு கேமிங் சப்போர்ட் மாடலாகும். ஆகவே, பக்கா கேமிங் பர்ஃபாமன்ஸ் கொண்ட அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரெட்மேஜிக் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் மிரள விட்டிருக்கிறது. ஆகவே, சாம்சங் ஜிஎன்5 சென்சார் (Samsung GN5) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + ஜிகாடிவைஸ் ஜிசி01எம்ஐ (GigaDevice GC02M1) சென்சார் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
16 எம்பி அண்டர் டிஸ்பிளே ஃபிரன்ட்-பேசிங் கேமரா (Under-display Front-facing Camera) வருகிறது. ஆகவே, வீடியோ மற்றும் கேமிங் அனுபவம் மிரட்டலாக இருக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X ULTRA) சப்போர்ட் உள்ளது.
டூயல் 1115K ஸ்பீக்கர்கள் மற்றும் 3 மைக்குகள் வருகின்றன. கேமிங் பிரியர்களுக்கு பக்கா பேக்கப் கொடுக்க 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 8.9 மிமீ தடிமன் மற்றும் 229 கிராம் எடை கொண்டிருக்கிறது. 5ஜி என்எஸ்ஏ/எஸ்ஏ, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி உள்ளது.
அதேபோல வை-பை 6ஈ (Wi-Fi 6E 802), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் உள்ளது. இந்த போனில் டார்க் நைட் மற்றும் ஒயிட் நைட் (Dark Knight and White Knigh), டிரான்ஸ்பரன்ட் சில்வர் டியூட்டீரியம் மற்றும் டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட் (Transparent Silver Deuterium and Transparent Dark Knight) மாடல்கள் உள்ளன.
இதில் டார்க் நைட் மற்றும் ஒயிட் நைட் மாடலின் 12 ஜிபி ரேம் + 256 மெமரி மாடலின் விலை ரூ.55,090ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.59,680ஆகவும் இருக்கிறது. அதேபோல டிரான்ஸ்பரன்ட் சில்வர் டியூட்டீரியம் மற்றும் டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட் மாடலின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ. 57,385ஆக இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.61,985ஆகவும் இருக்கிறது. இந்த ரெட்மேஜிக் போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அல்ட்ரா பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் மற்றும் ஏஐ சப்போர்ட் கொண்ட போன் வேண்டுமானால் இந்த மாடலை டாப் ஆப்ஷனில் வைக்கலாம்.


Click it and Unblock the Notifications








