யாரு சாமி அவன்.. BOE டிஸ்பிளே.. 16GB ரேம்.. 6500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. AI கேமிங்.. எந்த மாடல்?
கேமிங் கிங்குனு பேரே வெச்சிருலாம் போல என்று சொல்லும் விதமாக அண்டர் டிஸ்பிளே கேமரா, 960Hz டச் சாம்பிளிங் ரேட், 16 ஜிபி ரேம், 6500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அட்வான்ஸ்டு கூலிங் சிஸ்டம், ஏஐ கேமிங் சப்போர்ட், அட்ரினோ கிராபிக்ஸ் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ரெட்மேஜிக் 9எஸ் ப்ரோ (REDMAGIC 9S Pro) மாடலானது, குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மேஜிக் 9எஸ் ப்ரோ அம்சங்கள் (REDMAGIC 9S Pro Specifications): இந்த ரெட்மேஜிக் போனில் 6. இன்ச் (2480 x 1116 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பிஓஈ கியூ9பிளஸ் (BOE Q9+) மாடல் பேனலாகும். கேமிங் வேரியண்ட் என்பதால், 960Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது.

மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 21600Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் சப்போர்ட் வருகிறது. அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் வருவதால், கேமிங் அனுபவம் மிரளவிடும்படி இருக்கும். இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வருகிறது.
பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சிப்செட் ஒரு லீடிங் வெர்ஷனாகும். அதேபோல நுபியாவின் லேட்டஸ்ட் ரெட்மேஜிக் ஓஎஸ் 9.5 (Redmagic OS 9.5) வருகிறது.
இந்த ரெட்மேஜிக் ஓஎஸ் 9.5 வெர்ஷனானது, ஏஐ கேமிங் பீச்சர்களை கொண்டிருக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஹெவி யூசேஜ் பேக்கப்புக்காக 6500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. பேட்டரி ஹீட் கன்ட்ரோலுக்காக ஐசிஈ 13.5 (ICE 13.5) அட்வான்ஸ்டு கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது.

இதுபோக ஹை-ஸ்பீடு டர்போஃபேன் வருகிறது. இந்த ஃபேன் 4dB அளவில் மட்டுமே நாய்ஸ் அவுட்புட் கொடுக்கும். கேமிங் மாடலாக இருந்தாலும், கேமராவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சாருடன் வருகிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் வருகிறது.
இதுபோக 2 எம்பி மேக்ரோ கேமராவானது, ஜிகாடிவைஸ் ஜிசி02எம்1 (GigaDevice GC02M1) சென்சாருடன் வருகிறது. 16 எம்பி அண்டர் டிஸ்பிளே கேமரா வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்:எஸ்க் அல்ட்ரா மற்றும் 3 மைக்ஸ் வருகிறது. இந்த ரெட்மேஜிக் 9எஸ் ப்ரோ மாடலானது, 8.9 மிமீ தடிமன் மற்றும் 229 கிராம் எடை வருகிறது.
இந்த போனில் ஸ்னோவ்ஃபால் (Snowfall), ஸ்லீட் (Sleet), சைக்லோன் (Cyclone) மற்றும் ஃப்ரோஸ்ட் (Frost) ஆகிய 4 வேரியண்ட்கள் வருகின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,230ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.66,765ஆக இருக்கிறது. இப்போது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஜூலை 23 எர்லி பேர்ட் சேல் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications








