அதிரவிடும் பட்ஜெட்.. 16GB ரேம்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?
நுபியா நிறுவனம் தனது ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
ரெட் மேஜிக் 9 ப்ரோ அம்சங்கள்: 6.8-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 2480 × 1116 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 960 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் இதில் அண்டர் டிஸ்பிளே கேமரா (Under Display Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிஸ்பிளேவில் பன்ச் ஹோல் கிடையாது. அதேபோல கார்னர்-டூ-கார்னர் (Corner-To-Corner) டிஸ்பிளேவாக இருப்பதால், மினி லேப்டாப் அல்லது மினி டிவியில் கேம் விளையாடுவதைப் போல உணர்வைக் கொடுக்கும் இந்த புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ போன்.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரெட்மேஜிக் ஓஎஸ் 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 1115K ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா ஆதரவு, 3 மைக்குகள் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.
50எம்பி பிரைமரி கேமரா (Samsung GN5 sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Samsung JN1 sensor) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவு இதில் உள்ளது.
6500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். அதேபோல் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.

மேலும் இந்த போனில் ஐஆர் பிளாஸ்டர், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்லீட் (பிளாக்), ஸ்னோஃபால் (சில்வர்) மற்றும் டிரான்ஸ்பரன்ட் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நுபியா நிறுவனம்.
இந்தியாவுக்கு வருமா? ரெட் மேஜிக் 9 ப்ரோ போனின் ஆரம்ப விலை USD 649 (இந்திய மதிப்பில் ரூ.53,945). வரும் ஜனவரி 3-ம் தேதி சில நாடுகளில் மட்டும் இந்த போன் விற்பனைக்கு வரும். ஆனால் ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதைக் குறித்து நுபியா நிறுவனம் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் இந்தியாவுக்கு வந்தால் அதிக வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








