16ஜிபி ரேம்: ஒன்பிளஸ் பக்கம் இனி திரும்பிக் கூட பாக்க மாட்டாங்க! அறிமுகமானது புதிய RedMagic 8S Pro.. விலை?
ரெட்மேஜிக் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகிறது. எனவே உலகளவில் இந்த போனகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் 16ஜிபி ரேம் உடன் சர்வதேச சந்தையில் ரெட்மிமேஜிக் 8எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே சீனாவில் 24ஜிபி ரேம் உடன் ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ (RedMagic 8S Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதேபோல் 16ஜிபி ரேம் உடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 16ஜிபி ரேம் கொண்ட ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ போனின் விலை தற்போது தெரியவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ .
குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 10-பிட் கலர்ஸ், 960ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ போன். அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.
12ஜிபி/16ஜிபி ரேம் மறறும் 256ஜிபி/512ஜிபிஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்குகள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா(Samsung GN5 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

3.36ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ 740 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் Redmagic OS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ மாடல். இந்த போனின் ஆரம்ப விலை $649 (ரூ.53,240). வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த ரெட் மேஜிக் 8எஸ் ப்ரோ விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








