யாரு சாமி அவன்.. 7500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. IPX8 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 11எஸ் ப்ரோ (RedMagic 11S Pro) ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அண்டர் டிஸ்பிளே கேமரா, 24000 ஆர்பிஎம் டர்போ ஃபேன், ஓஎல்இடி டிஸ்பிளே, 7500mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் பட்டையை கிளப்புகிறது.
இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆசியாவில் இந்தியா உள்பட ஆஸ்திரேலியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்க இருக்கிறது. ஜூன் 10ஆம் தேதி முதல் ஓப்பன் சேல் தொடங்குகிறது. ஜூன் 3 முதல் 9ஆம் தேதி வரையில் எர்லி பேர்ட் வவுச்சர்கள் கிடைக்கின்றன.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.81,638ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.91,254ஆக இருக்கிறது. இது அமெரிக்க டாலர்களில் அடிப்படையில் கொடுக்கப்பட்ட விலையாக இருக்கிறது. இந்தியாவில் மாறுபடலாம். இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் கேமிங் மாடலாக இருப்பதால் அக்வாகோர் கூலிங் சிஸ்டம் (AquaCore Cooling System) கிடைக்கிறது. ஆகவே, ஆக்டிவ் ஏர்ப்ளோவ் (Active Airflow) மற்றும் லிக்விட் கூலிங் (Liquid Cooling) கிடைக்கும். 24000 ஆர்பிஎம் டர்போ ஃபேன் (RPM Turbo Fan) கிடைக்கிறது. 13116 எம்எம் வேப்பர் சேம்பர் கிடைக்கிறது. ஆகவே, ஹீட் கன்ட்ரோல் பிரீமியமாக இருக்கும்.

ரெட்மேஜிக் 11எஸ் ப்ரோ அம்சங்கள் (RedMagic 11S Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 லீடிங் எடிஷன் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 Leading Edition 3nm) சிப்செட்டை இந்த அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரெட்மேஜிக் 11எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
6.85 இன்ச் (2688 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி பிஓஇ எக்ஸ்10 (OLED BOE X10) சிப்செட் கிடைத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 960Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது.
ரெட்மேஜிக் ஓஎஸ் 11 (REDMAGIC OS 11) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. எப்/1.88 அபெர்சர், ஓவி50இ40 (OV50E40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் ஓவி50டி40 (OV50D40) சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி அண்டர்-டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இதில் ஓவி16ஏ (OV16A) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7500mAh பேட்டரியை இந்த ரெட்மேஜிக் 11எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.9 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.
230 கிராம் எடை கொடுத்துள்ளது. IPX8 ரேட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூப் சப்போர்ட் கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. டூயல் 1115கே ஸ்பீக்கர்கள் (Dual 1115K Speakers) கிடைத்து இருக்கின்றன.
மேலும், டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X ULTRA) சப்போர்ட் கிடைக்கிறது. மூன்று மைக்குகள் உள்ளன. கேமிங் மாடலாக இருப்பதால், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (Dual X-axis Linear Motor) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 6.0 கிடைக்கிறது. ஜிபிஎஸ், குளோனாஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications