Home
Mobile

என்னங்க இது இப்படி இருக்கு.. OLED டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. OIS கேமரா.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓஎல்இடி டிஸ்பிளே, 8000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, 12 ரேம் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 11 ப்ரோ (REDMAGIC 11 Pro) களமிறங்கி இருக்கிறது. 4டி கூலர் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம், அண்டர் டிஸ்பிளே கேமரா, அல்ட்ரா கிராபிக்ஸ் என்ஜின் 3.0 போன்ற மற்ற பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள், சாம்சங் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்கள் ரெட்மேஜிக் மாடல்களில் கிடைக்கின்றன. கேமிங் மாடல்களாக களமிறங்குவதால், டிசைன் தொடங்கி, சாப்ட்வேர், ஹார்ட்வேர் வரையில் பக்காவான பீச்சர்களை பார்க்க முடிகிறது. இதில் ரெட்மேஜிக் 11 ப்ரோ ஒருபடி மேலே சென்றுவிட்டது.

என்னங்க இது இப்படி இருக்கு.. OLED டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. மாடல்?

ரெட்மேஜிக் 11 ப்ரோ அம்சங்கள் (RedMagic 11 Pro Specifications): இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மட்டுமல்லாமல், ரெட்கோட் ஆர்4 (RedCore R4) கிடைக்கிறது.

இது கேமிங் பீச்சர்களுக்காக பிரத்யேகமாக கிடைக்கிறது. இதில் அல்ட்ரா கிராபிக்ஸ் என்ஜின் 3.0 (Ultra Graphics Engine 3.0) போன்ற கேமிங் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரெட்மேஜிக் ஓஎஸ் 11 (REDMAGIC OS 11) கிடைக்கிறது. மோரா ஏஐ அசிஸ்டன்ட், ஏஐ ஆப்ஜெக்ட் ரிககனைசேஷன் போன்ற பீச்சர்களை இந்த ரெட்மேஜிக் ஓஎஸ் 11 கொடுக்கிறது.

இந்த ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் (2688 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஇ எக்ஸ்10 (BOE X10) டிஸ்பிளே மாடலில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 2,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

இதுவொரு அண்டர் டிஸ்பிளே கேமரா மாடலாகும். ஸ்டார் ஷீல்டு ஐ புரொடெக்சன் 2.0 (Star Shield Eye Protection 2.0), மேஜிக் டச் 3.0 (Magic Touch 3.0) மற்றும் வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. 4டி கூலர் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

8000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X ULTRA) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் லீனயர் மோட்டார்கள் உள்ளன.

IPX8 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. இதே பீச்சர்களுடன் ரெட்மி மேஜிக் 11 ப்ரோ பிளஸ் மாடலும் வெளியாகி இருக்கிறது. இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டும் கூடுதலாக கிடைக்கும். ஆகவே, ப்ரோ பிளஸ் மாடலில் 7500mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 80W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.

ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.61,638ஆக இருக்கிறது. ரெட்மேஜிக் 11 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.70,269ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. குளோபல் வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMAGIC 11 Pro With 12GB RAM 50MP Camera 8000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X