ஒன்பிளஸ் நிறுவனத்தை வெடவெடத்து போக வைத்த புதிய போன்.. 7500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரெட்மேஜிக் 11 ப்ரோ (Redmagic 11 Pro) ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலக சந்தையிலும் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சற்று உயர்வான விலையில் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
ரெட்மேஜிக் 11 ப்ரோ அம்சங்கள் (Redmagic 11 Pro Specifications): 6.85-இன்ச் 1.5கே ஒஎல்இடி BOE X10 டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 10-பிட் கலர் டெப்த். 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங், 960Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் உடன் ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.
24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் REDMAGIC OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), டூயல் 1115கே ஸ்பீக்கர்கள், உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. அதுவும் IPX8 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

7500mAh பேட்டரி உடன் ரெட்மேஜிக் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11.பிஇ, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மேஜிக் 11 ப்ரோ போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 203 கிராம் ஆகும். குறிப்பாக ரெட்மேஜிக் 11 ப்ரோ போனின் ஆரம்ப விலை $749 (இந்திய மதிப்பில் ரு.66,505)-ஆக உள்ளது. அதுவும் இது ஒன்பிளஸ் 15 போனுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








