Home
Mobile

மிரண்டு போவீங்க.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 7050mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மூக்கில் விரல் வைக்கும்படி 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி மட்டுமல்லாமல், கேமிங்குக்கு பிரத்யேக சிப்செட், ஹீட் கன்ட்ரோலுக்கு டர்போஃபேன், 7050mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் போன்ற பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 10எஸ் ப்ரோ (REDMAGIC 10S Pro) போனானது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.

ரெட்மேஜிக் 10எஸ் ப்ரோ அம்சங்கள் (REDMAGIC 10S Pro Specifications): இந்த ரெட்மேஜிக் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரெட்மேஜிக் ஓஎஸ் 10.5 (REDMAGIC OS 10.5) கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் லீடிங் எடிஷன் (Octa Core 3nm Snapdragon 8 Elite Leading Edition) சிப்செட் கிடைக்கிறது.

மிரண்டு போவீங்க.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டருடன் 6.85 (2688 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிஓஈ கியூ9பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. லேக்-ப்ரீ கேமிங் அனுபவம் கொடுக்கும்.

இதுபோக 1.5K ரெசொலூஷன், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. கேமிங் பிரியர்களுக்காக ரெட் கோட் ஆர்3 ப்ரோ (Red Core R3 Pro) என்னும் பிரத்யேக சிப்செட் கிடைக்கிறது.

இது கேமிங்கின் போது 120FPS அவுட்புட் மற்றும் 2K ரெசொலூஷன் கொடுக்கும். இந்த ரெட்மேஜிக் 10எஸ் ப்ரோ போனில் 7050mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50ஈ40 (OmniVision OV50E40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா (ஓஐஎஸ் டெக்னாலஜி) கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50D) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா-வைடு வருகிறது.

மிரண்டு போவீங்க.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இதுபோக 2 எம்பி மேக்ரே கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி02எப்10 (OmniVision OV02F10) சென்சார் கிடைக்கிறது. 16 எம்பி அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டரில் ஓம்னிவிஷன் ஓவி16ஏ1கியூ (OmniVision OV16A1Q) சென்சார் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் மாடலாக இருந்தாலும், கேமரா பீச்சர்களிலும் பிரீமியம் மற்றும் குவாலிட்டியான சென்சார்களை பேக் செய்துள்ளது.

டிசைனை பார்க்கையில், ஹீட் கன்ட்ரோலுக்காக 23000 ஆர்பிஎம் டர்போஃபேன் கிடைக்கிறது. இந்த ஃபேன் மூலம் 4dB சவுண்ட் மட்டுமே கேட்க முடியும். ஆகவே, பெரிதாக தெரியாது. 15 கலர்களில் ஆர்ஜிபி லைட்டனிங் பாடி கிடைக்கிறது. இதுபோக 520Hz கேமிங் ஷோல்டர் கீ, எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், மூன்று மைக்குகள் கிடைக்கின்றன.

மேலும், விசி கூலிங் சேம்பர், லிக்விட் மெட்டல் சிபியு கவர்டு போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரெட்மேஜிக் 10எஸ் ப்ரோ போனில் நைட்ஃபால் (Nightfall), பிளாக் (Black) மற்றும் மூன்லைட் (Moonlight) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இதில் பிளாக் மட்டும் மேட் பிளாக் பேனலுடன் கிடைக்கும். மற்ற கலர்கள் சில்வர் டிரான்ஸ்பரன்ட் & டஸ்க்/பிளாக் டிரான்ஸ்பரன்ட் கிடைக்கிறது.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,920ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,710ஆகவும், 24 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.85,658ஆகவும் இருக்கிறது. இந்த விலை குளோபல் மார்கெட் விலையாகும். ஆகவே, அமெரிக்க டாலரின் அடிப்படையில் கிடைக்கிறது.

இந்த ரெட்மேஜிக் 10எஸ் ப்ரோ போனின் எர்லி பேர்டு சேல் ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 18ஆம் தேதி முதல் ஓப்பன் சேல் தொடங்குகிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகள் முதல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வரையில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMAGIC 10S Pro With 24GB RAM 50MP Camera Goes Global Sale From June 18 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X