மிரட்டிவிட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 7050mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படி ஓஎல்இடி டிஸ்பிளே, 24 ஜிபி ரேம், 7050mAh பேட்டரி, 120W ஃபாஸ் சார்ஜிங், ஓம்னிவிஷன் மெயின் கேமரா போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர், பிளாட் டிசைன், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், சென்ட்ரிபியூகள் பேன் போன்ற கேமிங் பிரியர்களுக்கான உச்சபட்ச பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 10 ப்ரோ (RedMagic 10 Pro) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த ரெட்மேஜிக்கின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக ரெட்மேஜிக் மாடல்கள் வெளியாகி வருகின்றன. சொல்லப்போனால், ஸ்மார்ட்போனில் சிப்செட் மட்டுமல்லாமல், கூடுதலாக கேமிங்குங்கு தனி சிப்செட், பேட்டரி கூலிங் சிஸ்டம், சென்ட்ரிபியூகள் பேன், அண்டர் டிஸ்பிளே கேமரா போன்ற பீச்சர்கள் ரெட்மேஜிக் மாடல்களிலே வெளியாகின. இப்போது, ரெட்மேஜிக் 10 ப்ரோ இதில் சேர்ந்துவிட்டது.

ரெட்மேஜிக் 10 ப்ரோ அம்சங்கள் (RedMagic 10 Pro Specifications): இந்த ரெட்மேஜிக் போனில் அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் பிரீமியம் கேமிங் பிரியர்களுக்கு லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இதுபோக ரெட் கோர் ஆர்3 (Red Core R3) கேமிங் சிப்செட் பேக் செய்துள்ளது. இது 2K ரெசொலூஷன் மற்றும் 120 எப்பிஎஸ் தரத்தில் லாக்-ப்ரீ கேமிங் அவுட்புட் கொடுக்கும். இந்த கேமிங்குக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி 7050mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. வெறும் 11 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.
பேட்டரி ஹீட் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் கன்ட்ரோலுக்கு காம்போசைட் லிக்விட் மெட்டல் கூலிங் (Composite Liquid Metal Cooling) மற்றும் ஹைட் வீல்ஸ் (Hot Wheels) என்னும் சென்ட்ரிபியூகள் பேன் கிடைக்கிறது. மேலும், டான்ஜிசி 0815 டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (Dongci 0815 Dual X-axis Linear Motors) கிடைக்கிறது. டூயல் 111K ஸ்பீக்கர்கள் பேக் செய்துள்ளது.

மேலும், டிடிஎஸ்:அல்ட்ரா (DTS:X ULTRA) மற்றும் மூன்று மைக்குள் கிடைக்கிறது. இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் இருக்கின்றன. மேலும், 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கின்றன.
1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.85 இன்ச் (2688 × 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பிரீமியம் பிஓஈ கியூ9பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 960Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.
ஓம்னிவிஷன் சென்சார்களுடன் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதேபோல 16 எம்பி அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. கேமராவில் ஏஐ எலிமினேஷன் (AI Elimination), ஏஐ ஆல்பம் (AI Album) போன்ற ஏஐ பீச்சர்கள் இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 15ஓஎஸ், ரெட்மேஜிக் ஏஐ ஓஎஸ் 10.0 கிடைக்கிறது.
இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ போனின் டார்க் நைட்/டே வாரியர் வெர்ஷனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.58,425ஆக இருக்கிறது. டியூட்டிரியம் டிரான்பரன்ட் டார்க் நைட்/சில்வர் விங் வெர்ஷனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.61,930ஆக இருக்கிறது. சீனாவில் பிரீ-ஆர்டருக்கு வந்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications