Home
Mobile

ஃபுள் வியூனா இதான்டா சாமி.. உலகத்தின் முதல் 7 இன்ச் டிஸ்பிளே Mobile.. அண்டர் கேமரா டிஸ்பிளேவுடன் அசத்துது..

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் அசுரர் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் தயாரிப்பு துறையில் பல முன்னேற்றங்கள் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்கள் மாதம் தோறும் வளர்ச்சி அடைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. வெறும் தொடர்பில் இணைய அனுமதிக்கும் ஒரு சாதனமாக பார்க்கப்பட மொபைல் போன்கள் இன்று பொழுதுபோக்கு, கேமரா, கேமிங் என்று பல பரிணாமங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே சாதனத்தில் பயன்படுத்த கிடைப்பது தான்.

இதை ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருந்தாலும், நுபியா (Nubia) நிறுவனம் ஒரு படி மேலே சென்று, உலகத்தில் உள்ள எல்லா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் உலக மக்களையும் வியப்படைய செய்யும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அது தான் அண்டர் டிஸ்பிளே கேமராவுடனான உலகத்தின் மூலம் முழு டிஸ்பிளே ஸ்மார்ட்போன் சாதனம்.

ஃபுள் வியூனா இதான்டா சாமி.. உலகத்தின் முதல் 7 இன்ச் டிஸ்பிளே Mobile..

ஆம், உலகத்தின் முதல் முழு டிஸ்பிளே ஸ்மார்ட்போன் மாடலை நுபியா நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஸ்மார்ட்போனின் மேல் பகுதி முதல் அடிப்பகுதி வரை, எந்தவிதமான நாட்ச் மற்றும் கேமராவிற்கான பன்ச் ஹோல் என்று எதுவுமே இல்லாமல், சுத்தமான நீண்ட டிஸ்பிளேவை கொண்ட ஒரு புதிய டிஸ்பிளேவை நுபியா நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய ஃபுள் டிஸ்பிளே தொழில்நுட்பத்தை நிறுவனம் அதன் ரெட்மேஜிக் 10 ப்ரோ சீரிஸ் (RedMagic 10 Pro series) ஸ்மார்ட்போன் வரிசையில் அறிமுகம் செய்யவுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ரெட்மேஜிக் 10 ப்ரோ சீரிஸ் (RedMagic 10 Pro series) ஸ்மார்ட்போன் சாதனங்கள் வரும் நவம்பர் 13, 2024 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுபியா நிறுவனம் BOE உடன் இணைந்து உலகத்தின் முதல் அதிநவீன அண்டர் ஸ்கிரீன் கேமரா புள் ஸ்கிரீன் இன்னோவேஷன் டிஸ்பிளே என்ற புதிய டிஸ்பிளேவை (under-screen camera full-screen innovation) அதன் ரெட்மேஜிக் 10 ப்ரோ சீரிஸ் (RedMagic 10 Pro series) ஸ்மார்ட்போன் வரிசையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிஸ்பிளே 1.5K தரத்தை முழுமையாக வழங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிஸ்பிளே 1.5K உடன் அல்ட்ரா ஹை-ஸ்கிரீன் டு பாடி ரேஷியா ஆதரவை (1.5K with an ultra-high screen-to-body ratio of 95.3%) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 95.3% வரம்பை ஆதரிக்கும் உண்மையான முழு டிஸ்பிளேவாக வெளிவருகிறது. இது எக்ஸலெண்ட் பெர்பார்மென்ஸ் உடன் உயர்தர ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை ஆதரிக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. இது ஹை-பிரைட்னஸ் உடன் வருகிறது.

இந்த புதிய டிஸ்பிளே வூகாங் ஸ்கிரீன் "Wukong Screen" என்று அழைக்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே ரெட்மேஜிக் 10 ப்ரோ சீரிஸ் மற்றும் நுபியா Z70 அல்ட்ரா (nubia Z70 Ultra) ஆகிய ஸ்மார்ட்போன்களில் காணப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றின் அறிமுகம் மிக விரைவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 7" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவாக இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

உலகத்தின் முதல் 7" இன்ச் அண்டர் கேமரா டிஸ்பிளேவாக (Display) இது அறிமுகம் செய்யப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 144Hz மேல் ரெஃப்ரஷ் ரேட்டை (144Hz refresh rate) ஆதரிக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite SoC) சிப்செட் உடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் நாம் 7050mAh பேட்டரி (Battery) மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) ஆதரவை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
RedMagic 10 Pro series with 1.5K Wukong Screen Under Camera 7 Inch Display Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X