மிரண்டு போவீங்க.. 24GB ரேம்.. 7050mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படி 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 7050mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் ரெட்மேஜிக் 10 ப்ரோ லைட்ஸ்பீடு எடிஷன் (REDMAGIC 10 Pro Lightspeed Edition) போனானது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் இந்த அல்ட்ரா பிரீமியம் போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மேஜிக் 10 ப்ரோ லைட்ஸ்பீடு எடிஷன் அம்சங்கள் (REDMAGIC 10 Pro Lightspeed Edition Specifications): இந்த பிரீமியம் வேரியண்ட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரெட்மேஜிக் ஓஎஸ் 10 (REDMAGIC OS 10) கிடைக்கிறது. பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது.

கேமிங் பிரியர்களை மிரளவிடும்படி அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. டிஸ்பிளேவிலும் கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, 6.85 இன்ச் (2688 × 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த பிஓஇ கியூ9பிளஸ் (BOE Q9+) டிஸ்பிளே மாடலில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 960Hz டச் சாம்பிளிங் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டிசி டிம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. ரெட்மேஜிக் 10 ப்ரோ லைட்ஸ்பீடு எடிஷனில் மூன்று வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்க இருக்கின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
கேமராவில் பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50ஈ40 (OmniVision OV50E40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி50டி (OmniVision OV50D) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் 120 டிகிரி வைடு அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
மேலும், ஓம்னிவிஷன் ஓவி02எப்10 (OmniVision OV02F10) சென்சாருடன் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. ரெட்மேஜிக் போன்களில் வழக்கமாக கிடைக்கும் அண்டர் டிஸ்பிளே டிசைனில் ஓம்னிவிஷன் ஓவி16ஏ1கியூ (OmniVision OV16A1Q) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு கூடுதலாக பல்வேறு பீச்சர்கள் இருக்கின்றன. டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் கிடைக்கிறது.
3 மைக்குகள் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. மேலும், டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X ULTRA) கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7050mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, பேக்கப் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இவ்வளவு பெரிய பேட்டரி வருவதால், 229 கிராம் எடை இருக்கிறது. 8.9 எம்எம் தடிமன் வருகிறது. வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) உள்ளது.
இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ லைட்ஸ்பீடு எடிஷன் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இருக்கிறது. மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA /NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் என்எப்சி (NFC) சப்போர்ட் கிடைக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ லைட்ஸ்பீடு எடிஷன் வந்திருக்கிறது.
ஜனவரி 13ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. ரெட்மேஜிக் தளத்தில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியா உள்பட வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ லைட்ஸ்பீடு எடிஷனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,950ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








