Home
Mobile

மொத்த மார்கெட் காலி.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

அல்ட்ரா பிரீமியம் கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்படி அண்டர் ஸ்கிரீன் கேமரா கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மட்டுமல்லாமல், ரெட்கோர் ஆர்3 என்னும் பிரத்யேக கேமிங் சிப்செட் போன்ற பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 10 ஏர் (REDMAGIC 10 Air) போனானது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கும் இந்த பிரீமியம் கேமிங் போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்மேஜிக் 10 ஏர் அம்சங்கள் (REDMAGIC 10 Air Specifications): இந்த ரெட்மேஜிக் போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரெட்மேஜிக் ஓஎஸ் 10 (REDMAGIC OS 10) கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

மொத்த மார்கெட் காலி.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி!

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 6.8 இன்ச் (2480 x 1116 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

இதுபோக கேமிங் பிரியர்களுக்காக 2,000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. அதேபோல ரெட்கோர் ஆர்3 (RedCore R3) சிப்செட் மற்றும் எனர்ஜி கியூப் டெக்னாலஜி (Energy Cube Technology) சப்போர்ட் கிடைக்கிறது. ஓவி50இ40 (OV50E40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

அதேபோல ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization),ஏபிஎல் கோட்டெட் ஆன்டி-கிளார் (APL Coated Anti-glare) சப்போர்ட் கிடைக்கிறது. ஓவி16இகியூ (OV16EQ) சென்சாருடன் 16 எம்பி டெல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ரெட்மேஜிக் 10 ஏர் போனில் 6000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

52 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஐஸ்-எக்ஸ் கூலிங் சிஸ்டம் (ICE-X Cooling System) மற்றும் லிக்விட் மெட்டல் (Liquid Metal) சப்போர்ட் கிடைக்கிறது. அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under Display Fingerprint Sensor), ஜி சென்சார் (G Sensor), எலக்ட்ரானிக் காம்பஸ் (Electronic Compass), அண்டர்-ஸ்கிரீன் லைட் சென்சார் (Under-screen Light Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது.

பிளாக் டிவைலைட் (Black Twilight), ஒயிட் ஹெயில்ஸ்டோன் (White Hailstone), ஆரஞ்ச் பிளார் (Orange Flare) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மேஜிக் 10 ஏர் போனின் ஆரம்ப விலை ரூ.46,938 பட்ஜெட்டில் தொடங்குகிறது. இப்போது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. எர்லி-பேர்ட் சேல் மே 6ஆம் தேதி தொடங்குகிறது. ஓப்பன் சேல் மே 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ரெட்மேஜிக் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMAGIC 10 Air With 50M Camera 12GB RAM 6000mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X