பின்றானே இவன்.. 16GB ரேம்.. 6000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 2 சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக சிப்செட், மேஜிக் கூலிங் சிஸ்டம், 6000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் ரெட்மேஜிக் 10 ஏர் (REDMAGIC 10 Air) வெளியாகி இருக்கிறது. இதுபோக அமோலெட் டிஸ்பிளே, அண்டர் டிஸ்பிளே செல்பீ ஷூட்டர், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ரெட்மேஜிக் 10 ஏர் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மேஜிக் 10 ஏர் அம்சங்கள் (REDMAGIC 10 Air Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரெட்மேஜிக் ஓஎஸ் 10 (REDMAGIC OS 10) கிடைக்கிறது. கேமிங் மற்றும் மல்டி மீடியாவில் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8 Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) வருகிறது.

இதற்கு ஏற்ப 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் ஆகிய வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 6.8 இன்ச் (2480 x 1116 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கிறது. இந்த ரெட்மேஜிக் 10 ஏர் போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் (அண்டர் டிஸ்பிளே) கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், 6000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.
33 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த பேட்டரி இருந்தும் 7.85 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. ஆனால், 205 எடை கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், ஐஸ் மேஜிக் கூலிங் சிஸ்டம் (ICE Magic Cooling System) கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களுக்கான சிப்செட் இருக்கிறது. ஆகவே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மட்டுமல்லாமல் ரெட் கோர் ஆர்3 (Red Core R3) சிப்செட் பேக் செய்துள்ளது. பிளாக் ஷேடோ (Black Shadow), ப்ரோஸ்ட் பிளேட் ஒயிட் (Frost Blade White) மற்றும் பிளேசிங் ஆரஞ்ச் (Blazing Orange) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,790ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.48,955ஆக இருக்கிறது. இதில் பிளேசிங் ஆரஞ்ச் கலருடன் கிடைக்கும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,285ஆக இருக்கிறது. சீனாவில் வெளியாகி அங்கு முதலில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications