ஏப்ரல் 16 உறுதி.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது REDMAGIC போன்.. எந்த மாடல்?
நுபியா (Nubia) நிறுவனம் தனது புதிய ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் (REDMAGIC 10 Air) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஏப்ரல் 16-ம் தேதி சீனாவில் இந்த ரெட்மேஜிக் போன் அறிமுகமாகும். குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த போன் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் போன் வெளிவரும். அதுவும் ஷேடோ பிளாக் ( Shadow Black), ஃப்ரோஸ்ட் பிளேட் ஒயிட் (Frost Blade White) மற்றும் ஃபிளேம் ஆரஞ்சு (Flame Orange) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் அம்சங்கள் (REDMAGIC 10 Air Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஓஇ ஒஎல்இடி (Full HD+ BOE OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2480 x 1116 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஒசி (Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் உடன் ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய ரெட்மேஜிக் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக 6000mAh பேட்டரி வசதி ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர வயர்லெஸ் சார்ஜிங் கூட இந்த போனுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பலவேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரெட்மேஜிக் 10 ப்ரோ ஏர் ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications