Home
Mobile

இது வேற ரகம்.. GAMING சிப்.. UDC டெக்னாலஜி.. 6500mAh பேட்டரி.. IR பிளாஸ்டர்.. எந்த மாடல்?

இந்தியாவை பொறுத்தவரையில் பிரம்மாண்டமான போன்கள் என்றால், பெரும்பாலானோருக்கு ஆப்பிள் அல்லது சாம்சங் போன்கள் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், கேமிங்குக்காகவே தனியாக சிப்செட், 6500mAh பேட்டரி, அந்த பேட்டரிக்கு கூலிங் ஃபேன் போன்ற அதிபிரம்மாண்டமாக மற்றொரு பிராண்ட் வந்திருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

நுபியா (Nubia) என்னும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமானது, பிரம்மாண்ட கேமிங் போன்களுக்கவே பெயர் பெற்றதாகும். ஏனென்றால், இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் வரும் சிப்செட், பேட்டரி மற்றும் டிஸ்பிளேவானது, எந்தவொரு கேமிங் போன்களிலும் கிடைக்காத வகையில் இருக்கிறது. அந்த வரிசையில், ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) போன் கேமிங் மார்கெட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

GAMING சிப்.. UDC டெக்னாலஜி.. 6500mAh பேட்டரி.. IR பிளாஸ்டர் போன்!

இந்த போனில் வழக்கமாக வரும் சிப்செட்டோடு சேர்த்து கேமிங்குக்காக மட்டுமே கூடுதலாக மற்றொரு சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் வரும் நவம்பர் 23ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அந்த போனின் முழு அம்சங்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ரெட் மேஜிக் 9 ப்ரோ அம்சங்கள் (Red Magic 9 Pro Specification): இந்த ரெட்மி மேஜிக் போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் மற்றும் ரெட் கோர் ஆர்2 (Red Core R2) என்னும் கேமிங் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு போன்களிலும் இல்லாத கேமிங் அனுவத்தை இந்த போனில் பெறலாம்.

GAMING சிப்.. UDC டெக்னாலஜி.. 6500mAh பேட்டரி.. IR பிளாஸ்டர் போன்!

இந்த போனில் 6.8 இன்ச் (2480 × 1116) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவிலும் கேமிங் பிரியர்களுக்காக அண்டர் டிஸ்பிளே கேமரா (Under Display Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிஸ்பிளேவில் பன்ச் ஹோல் கிடையாது. அதேபோல கார்னர்-டூ-கார்னர் (Corner-To-Corner) டிஸ்பிளேவாக இருப்பதால், மினி லேப்டாப் அல்லது மினி டிவியில் கேம் விளையாடுவதை போல இருக்கும்.

GAMING சிப்.. UDC டெக்னாலஜி.. 6500mAh பேட்டரி.. IR பிளாஸ்டர் போன்!

இந்த யுடிசி டெக்னாலஜியானது, (UDC Technology) மிகுந்த வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. இந்த போனின் ரியர் கேமரா, டிரிபிள் சிஸ்டம் கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் வருகிறது. அதோடு 8 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போனில் 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

அதோடு பேட்டரி ஹீட்டாவதை தடுக்க மினி கூலிங் பேன் (Cooling Fan) கொண்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 229 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் டார்க் நைட் நைட் (Dark Night Knight), டியூட்டிரியம் ஃபரன்ட் டார்க் நைட் நைட் (Deuterium Front Transparent Dark Night) மற்றும் டியூட்டிரியம் ஃபரன்ட் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங்க்ஸ் (Deuterium Front Transparent Silver Wings) ஆகிய மூன்று கலர்களில் வருகிறது.

கேமிங் பிரியர்களுக்காக இந்த போனின் 3 இடங்களில் ஆர்ஜிபி (RGB) எல்இடி லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வருகிறது. சீனாவில் வெளியான பின்பு, அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகிறது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.65,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Red Magic 9 Pro With R2 Pro Gaming Chip, 6500mAh Battery To Launch November 23 Price Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X