Home
Mobile

மிரண்டு போவீங்க.. 16GB ரேம்.. 1TB மெமரி.. RGB எல்இடி.. 6500mAh பேட்டரி.. COOLING ஃபேன்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த மார்கெட்டும் மிரண்டு போகும்படி 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 6500mAh பேட்டரி, அண்டர் டிஸ்பிளே கேமரா, கூலிங் ஃபேன் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) போன் விற்பனைக்கு வர இருக்கிறது.

ரெட் மேஜிக் 9 ப்ரோ அம்சங்கள் (Red Magic 9 Pro Specification): இந்த ரெட்மி மேஜிக் போன் 6.8 இன்ச் (2480 × 1116) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு அண்டர் டிஸ்பிளே கேமரா (Under Display Camera) கொண்ட போனாகும். ஆகவே, செல்பீ கேமரா இருப்பதே கண்களுக்கு தெரியாது.

மிரண்டு போவீங்க..  RGB எல்இடி.. 6500mAh பேட்டரி.. COOLING ஃபேன்!

இந்த போனின் டிஸ்பிளே யுடிசி டெக்னாலஜி (UDC Technology) கொண்ட கார்னர்-டூ-கார்னர் (Corner-To-Corner) மாடலாக இருப்பதால், வியக்க வைக்கும் படியான வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தை பெறலாம். இந்த ரெட் மேஜிக் போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரெட் கோர் ஆர்2 (Red Core R2) சிப் வருகிறது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் வருகின்றன.

இந்த மாடலில் டிரிபிள் ரியர் கேமரா வருகிறது. ஆகவே, சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 8 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

மிரண்டு போவீங்க..  RGB எல்இடி.. 6500mAh பேட்டரி.. COOLING ஃபேன்!

இந்த கேமரா அம்சங்கள் ஐக்யூ 12 மாடல்களில் வருவதை போலவே இருக்கிறது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ மாடலில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு கேமிங் மாடல் போன் (Gaming Model Phone) என்பதால், இவ்வளவு பெரிய பேட்டரி செட்டப் கொண்டிருக்கிறது.

இதனால், பேட்டரி ஹீட்டிங் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க கூலிங் பேன் (Cooling Fan) செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, 8.9 மிமீ அகலம் மற்றும் 229 கிராம் எடை கொண்டுள்ளது. அதோடு ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த ரெட் மேஜிக் போன் 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

அந்த வகையில், டார்க் நைட் நைட் (Dark Night Knight), டியூட்டிரியம் ஃபரன்ட் டார்க் நைட் நைட் (Deuterium Front Transparent Dark Night) மற்றும் டியூட்டிரியம் ஃபரன்ட் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங்க்ஸ் (Deuterium Front Transparent Silver Wings) ஆகிய 3 கலர்களில் கிடைக்க இருக்கிறது. அதோடு போனின் பாடியில் 3 இடங்களில் ஆர்ஜிபி (RGB) எல்இடி லைட்ஸ் இடம்பெற்றுள்ளது.

மிரண்டு போவீங்க..  RGB எல்இடி.. 6500mAh பேட்டரி.. COOLING ஃபேன்!

இவ்வளவு அம்சங்களில் பேட்டரி மற்றும் கலர் அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அம்சங்கள் அடுத்தடுத்த உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் வரும் நவம்பர் 23ஆம் தேதி சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Red Magic 9 Pro With 16GB RAM, 6500mAh Battery Launch on November 23 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X