யாரு சாமி அவன்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 2 சிப்செட்.. 165W சார்ஜிங்.. UDC கேமரா.. எந்த மாடல்?
உலகமே எதிர்பார்த்த ரெட் மேஜிக் 9 ப்ரோ மற்றும் ரெட் மேஜிக் 9 ப்ரோ பிளஸ் போன்கள் சீனாவில் விற்பனைக்கு வந்துவிட்டன. 24ஜிபி ரேம், 1டிபி மெமரி, 165W சார்ஜிங் போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்டிருக்கின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ரெட் மேஜிக் 9 ப்ரோ, ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Red Magic 9 Pro, Pro Plus Specification): இந்த மாடல்களில் 6.8 இன்ச் (2480 × 1116) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பிஓஈ கியூ9 பிளஸ் (BOE Q9+) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் வருகிறது.

அதோடு 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரெட் மேஜிக் ஓஎஸ் (Redmagic OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேகமாக ரெட் கோர் ஆர்2 (Red Core R2) சிப்செட் வருகிறது.
இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் வருகின்றன. அதேபோல ரெட் மேஜிக் 9 ப்ரோ பிளஸ் போனில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.
அதோடு 16 ஜிபி ரேம் +512 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்களும் வருகின்றன. இந்த போன்களின் கேமரா சிஸ்டம் ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜிசி02எம்1 (GC02M1) சென்சாருடன் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு அண்டர் டிஸ்பிளே கேமரா (UDC) மாடலாகும்.
இந்த ப்ரோ மாடலில் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ப்ரோ பிளஸ் மாடலில் 165W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு பேட்டரி ஹீட்டிங் பிரச்சனையை தவிர்க்க கூலிங் ஃபேன் இடம்பெற்றுள்ளது. டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.
ஐஆர் பிளாஸ்டர், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 போன்களும் டியூட்டிரியம் ஃபரன்ட் டார்க் நைட் நைட் (Deuterium Front Transparent Dark Night), டார்க் நைட் நைட் (Dark Night Knight) மற்றும் டியூட்டிரியம் ஃபரன்ட் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங்க்ஸ் (Deuterium Front Transparent Silver Wings) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கின்றன.

ரெட் மேஜிக் 9 ப்ரோ (டார்க் நைட்) மாடலின் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.51,526ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.57,239ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.61,093ஆகவும் இருக்கிறது.
அதேபோல ரெட் மேஜிக் 9 ப்ரோ (டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட்/சில்வர் விங்க்ஸ்) மாடலின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.58,535 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.63,205 ஆகவும் இருக்கிறது.
ரெட் மேஜிக் 9 ப்ரோ பிளஸ் (டார்க் நைட்) மாடலின் 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.64,366 ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.67,951 ஆகவும், 24 ஜிபி + 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.81,958ஆகவும் இருக்கிறது.
அதே போல ரெட் மேஜிக் 9 ப்ரோ பிளஸ் (டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட்/சில்வர் விங்க்ஸ்) மாடலின் 16 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.66,700 ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.70,202 ஆகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








