அதிரும் மார்க்கெட்.. 24GB ரேம்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. நவ.23-ல் வரும் புதிய ரெட் மேஜிக் போன்.. எந்த மாடல்?
நுபியா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது நுபியா நிறுவனம்.
அதாவது ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போன் ஆனது வரும் நவம்பர் 23-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகமானதும் விரைவில் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது புதிய ICE மேஜிக் கூலிங் சிஸ்டத்துடன் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த அசத்தலான போன் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
12ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 24ஜிபி ரேம் + 1டிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் ட்ரிபிள் ரியர் கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி வசதி, ஃபாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் நுபியா நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்த ரெட் மேஜிக் 8 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்ப்போம். ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ 740 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 8 ப்ரோ. பின்பு Redmagic OS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும்.
8ஜிபி/12ஜிபி மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ரெட் மேஜிக் 8 ப்ரோ போன். அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்குகள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட் மேஜிக் 8 ப்ரோ.

50எம்பி பிரைமரி கேமரா(Samsung GN5 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 8 ப்ரோ. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.
குறிப்பாக ரெட் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி வகை-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








