Home
Mobile

இதைவிட வேற என்ன வேணும்.. 165W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. வருகிறது மிரட்டலான போன்.. எந்த மாடல்?

வரும் நவம்பர் 23ஆம் தேதி ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது நுபியா நிறுவனம். மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ரெட்மி மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது

அதேபோல் இந்த போன் உலக நாடுகளிலும் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட் மேஜிக் 9 ப்ரோ போனின் அம்சங்கள் 3C சான்றிதழ் தளத்தில் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று வரவாகப் பார்ப்போம்.

165W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. வருகிறது மிரட்டலான போன்.. எந்த மாடல்

அதாவது 6500 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 165 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்து விட முடியும். குறிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

இந்த ரெட்மி மேஜிக் போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் மற்றும் ரெட் கோர் ஆர்2 (Red Core R2) என்னும் கேமிங் சிப்செட் வசதியும் உள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

165W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. வருகிறது மிரட்டலான போன்.. எந்த மாடல்

அதேபோல் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது புதிய ICE மேஜிக் கூலிங் சிஸ்டத்துடன் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்குத் தகுந்தபடி இந்த அசத்தலான போன் உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

6.8-இன்ச் டிஸ்பிளே உடன் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 2480 × 1116 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இதில் அண்டர் டிஸ்பிளே கேமரா (Under Display Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிஸ்பிளேவில் பன்ச் ஹோல் கிடையாது. அதேபோல கார்னர்-டூ-கார்னர் (Corner-To-Corner) டிஸ்பிளேவாக இருப்பதால், மினி லேப்டாப் அல்லது மினி டிவியில் கேம் விளையாடுவதைப் போல உணர்வைக் கொடுக்கும்.

50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கேமிங் பிரியர்களுக்காக இந்த போனில் ஆர்ஜிபி (RGB) எல்இடி லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த போனில்ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வசதியும் உள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு வரும் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போன்.

குறிப்பாக3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்குகள் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். டார்க் நைட் நைட் (Dark Night Knight), டியூட்டிரியம் ஃபரன்ட் டார்க் நைட் நைட் (Deuterium Front Transparent Dark Night) மற்றும் டியூட்டிரியம் ஃபரன்ட் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங்க்ஸ் (Deuterium Front Transparent Silver Wings) நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

165W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. வருகிறது மிரட்டலான போன்.. எந்த மாடல்

அதேபோல் இந்த போனில் 5ஜி ஆதரவு உள்ளது. மேலும் இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Red Magic 9 Pro will be introduced with 165W charging: check launch date, specifications and More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X