வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 80W சார்ஜிங்.. 6500mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த போன்? என்ன விலை?
நுபியா நிறுவனம் கடந்த ஆண்டு ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) போனை சீனாவில் அறிமுகம் செய்தது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்தது.
இந்நிலையில் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் குளோபல் ஸ்டோர் (Global store) மூலம் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட் மேஜிக் 9 ப்ரோ அம்சங்கள் ( Red Magic 9 Pro specifications): தரமான ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa-Core Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மேஜிக் ஓஎஸ் 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்
6.8-இன்ச் (OLED display) ஒஎல்இடி டிஸ்பிளே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2480 × 1116 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 960 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே இதில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக அண்டர் டிஸ்பிளே கேமரா (Under Display Camera)இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் டிஸ்பிளேவில் பன்ச் ஹோல் கிடையாது. அதேபோல கார்னர்-டூ-கார்னர் (Corner-To-Corner) டிஸ்பிளேவாக இருப்பதால், மினி லேப்டாப் அல்லது மினி டிவியில் கேம் விளையாடுவதைப் போல உணர்வைக் கொடுக்கும் இந்த போன்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா ஆதரவு, 3 மைக்குகள் மற்றும் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா (Samsung GN5 sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் (Samsung JN1 sensor) என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 6500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். அதேபோல் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W fast charging) வசதியும் இந்த போனில் உள்ளது.

ரெட் மேஜிக் 9 ப்ரோபோனில் ஐஆர் பிளாஸ்டர், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் ஆகிய சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்லீட் (பிளாக்), ஸ்னோஃபால் (சில்வர்) மற்றும் டிரான்ஸ்பரன்ட் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது நுபியா நிறுவனம். 5ஜி (5G), வைஃபை 6இ (Wi-Fi 6E), புளூடூத் 5.4 (Bluetooth 5.4), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
குறிப்பாக இந்த ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.54,038-ஆக உள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களைக் கொண்டுள்ளதால் இந்த போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








