நெருங்க முடியாத டிசைன்! அசைக்க முடியாத அம்சம்! 24GB ரேம் + 1TB மெமரி வேற! எந்த போன்?
ஒன்பிளஸ் (OnePlus), நத்திங் (Nothing)போன்களை தூக்கிசாப்பிடும் வகையில், புதுவிதமான டிசைனிலும், பிரம்மாண்ட அம்சங்களிலும் ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யத்தையே ஆட்டிப்பார்க்கும் வகையில், வெளியாக இருக்கிறது, ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ (Red Magic 8S Pro) போன். இந்த போனின் அம்சங்கள் இதோ.
சீனாவின் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் (BBK Electronics) நிறுவனத்துக்கு சொந்தமான ஒன்பிளஸ் (OnePlus) பிராண்ட்டின் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) போனே, 24 ஜிபி ரேம் உடன் வெளியாகும் முதல் போன் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அறிமுக தேதி உடனேயே வந்துவிட்டது, ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ (Red Magic 8S Pro) போன்.

கேமிங் ஸ்மார்ட்போன் தயாரிப்பில், முன்னணியில் இருக்கும் ரெட்மேஜிக் (REDMAGIC) நிறுவனம், அதிகப்படியான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொடுப்பதில் மற்ற அனைத்து பிராண்ட்களையும் பின்னுக்கு தள்ளி வருகிறது. இப்போது, உலகின் முதல் 24 ஜிபி ரேம் போனை வெளியிட காத்திருக்கிறது. நத்திங் போனின் டிசைன், ஒன்பிளஸ் போனின் அம்சங்கள் சேர்ந்தால், எப்படி இருக்குமோ அப்படியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன்.
இந்த போனின் மொத்த அம்சங்களையும் பார்த்தால், ஒரு கேமிங் லேப்டாப்புக்கு நிகராக இருக்கிறது. கேமிங், மல்டி டாஸ்கிங், ஆப் ரீலோடிங் பிரச்சனை என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு, இந்த போனை பயன்படுத்தினால், சொல்லிவிடலாம் போல இருக்கிறது. இந்த போனின் லீக்கான அம்சங்கள், விலை, எப்போது விற்பனைக்கு வரும் உள்ளிட்ட தகவல்கள் பின்வருமாறு.
ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ அம்சங்கள் (Red Magic 8S Pro Specifications): இந்த போன் 6.8 இன்ச் (2400*1080) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட் மேஜிங் 8 ப்ரோ (Red Magic 8 Pro) மாடலில் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த மாடலில் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதன்படி சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது.
இந்த போனும் ரெட் மேஜிக் 8 ப்ரோ போனை போலவே 65W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதி கொண்ட 6000mAh பேட்டரியுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ரெட் மேஜிக் 8 ப்ரோ போனின் மேட் (Matte), வொய்டு (Void) டைட்டானியம் (Titanium) ஆகிய கலர்களில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
வரும் ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போது, இந்த ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகும். இருப்பினும், ரெட் மேஜிக் 8 ப்ரோ போன் ரூ.65 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த போனின் விலை ரூ.70 முதல் ரூ.75 ஆயிரம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த போன் மார்க்கெட்டில் வெளியாகும் மற்ற போன்களைவிட டிசைனில் புதுவிதமாக இருக்கிறது. இதனாலேயே, நத்திங் போன்களுக்கு நிகரான எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications